உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 30 வாழைப்பழம், 4 கிலோ மாதுளம், 20 முட்டை! ரூ.23 கோடி எருமையின் அசத்தல் உணவு மெனு!

30 வாழைப்பழம், 4 கிலோ மாதுளம், 20 முட்டை! ரூ.23 கோடி எருமையின் அசத்தல் உணவு மெனு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்; ஹரியானா எருமையை 23 கோடி ரூபாய் வரை ஏலம் கேட்டும் அதன் உரிமையாளர் தராத நிலையில் அந்த எருமை உணவு மெனு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு; மீரட் நகரில் சர்வதேச அளவிலான கால்நடை கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்த பலரும் தாங்கள் வளர்த்து வரும் குதிரைகள், எருமைகள் ஆகியவற்றை பார்வைக்கு அழைத்து வந்தனர்.ஏராளமான கால்நடைகள் இருந்தாலும் அதில் ஒரேயொரு எருமைதான் அங்குள்ளோரை ஆச்சரியப்பட வைத்தது. அதற்கு காரணம் எந்த எருமை மாட்டின் உயரம், எடை மற்றும் அதன் தரம் தான்.இந்த எருமையின் உரிமையாளர் கில். ஹரியானாவின் சிர்ஸா பகுதியைச் சேர்ந்தவர். தமது எருமைமாட்டுக்கு அவர் அன்மோல் என்ற பெயர் வைத்துள்ளார். இந்த எருமைமாடு, முரா என்ற ரகத்தைச் சேர்ந்தது.கால்நடை கண்காட்சியில் இந்த எருமைமாட்டை 23 கோடி ரூபாய் வரை பலரும் ஏலம் கேட்டனர். ஆனால் உரிமையாளர் கில்லோ, எங்கள் குடும்பத்தில் ஒருவர் அன்மோல் என்று கூறி அதற்கு உடன்பட மறுத்துவிட்டார். அதே நேரம் எருமையின் தினசரி உணவு பட்டியலைக் கேட்டு கண்காட்சிக்கு வந்தவர்கள் அசந்தே விட்டனர்.13 அடி நீளம், 6 அடி அகலம், 1500 கிலோ எடை கொண்ட அன்மோலுக்கான தினசரி உணவுக்கு செலவிடப்படும் தொகை 1,500 ரூபாய். 250 கிராம் பாதாம், 30 வாழைப்பழங்கள், 4 கிலோ மாதுளை, 5 கிலோ பால், 20 முட்டைகள் ஆகியவற்றை அன்மோல் சாப்பிடுகிறது. இதுதவிர, கேக், பசுந்தீவனம், நெய், சோயாபீன்ஸ், மக்காச்சோளம் ஆகியவையும் உணவு பட்டியலில் இடம்பெற்றுள்ளது.உணவு மட்டுமல்ல, தினசரி சிறப்பான கவனிப்பும் அன்மோல் எருமைக்கு உண்டு. தினமும் இருமுறை எண்ணெய் (கடுகு+பாதாம் கலந்தது) குளியல், மசாஜ் என செமத்தியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறது. அன்றாட வாழ்க்கையே சொகுசாக மாறியிருக்கும் அன்மோலைக் கண்டு ஆச்சரியப்படாதவர்களே இல்லை எனலாம். இனி யாரேனும் எருமை என்று நம்மை திட்டினால்... நாம் அன்மோலை நினைத்து ஆறுதல் பட்டுக் கொள்ளலாம் என்று சொல்லலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

venugopal s
நவ 16, 2024 07:06

பிரதமர் மோடி பற்றிய தகவல்களை விட இது நாட்டுக்கு சற்று அதிக பயனுள்ள தகவலாக உள்ளது!


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 16, 2024 14:28

அப்போ ராகுல் பற்றிய தகவல்கள் பரவாயில்லையா .... நாட்டுக்கு பயனுள்ளதாக.....


Anantharaman Srinivasan
நவ 15, 2024 21:22

எருமையின் உணவைப்பற்றி சொன்னீங்க. சும்மா தினமும் இவ்வளவு தீனி போட்டு யாரும் வைத்திருக்க மாட்டார்கள். இதனால் என்ன use..? What is the output...?


dmk dinamalar allakkai
நவ 15, 2024 20:16

நல்ல வேலை கட்டுமரம் இல்ல. இருந்தா பொய் கேஸ் போட்டு என்னோட எருமை மாடுன்னு சொல்லுவாங்க..


Natarajan Ramanathan
நவ 15, 2024 19:54

அது வளர்ப்பவர்களை பொறுத்தது. சென்னை கோட்டூர்புரத்தில் வளர்ந்த ஒரு மானுக்கு தினம் மீன் கொடுப்பதாக பல வருசம் முன்பே செய்தி வந்தது.


Ram pollachi
நவ 15, 2024 19:39

பண்ணை கோழிகள் தீவனத்தில் எருமை மாட்டு எலும்புகள் உள்ளதாக தகவல். ஆக தானிக்கு தீனி சரியா போச்சு!


ஆரூர் ரங்
நவ 15, 2024 19:21

முட்டையா? சரி சரி மாட்டுக்கறி கொடுக்காத வரைக்கும் ஓகே


நிக்கோல்தாம்சன்
நவ 15, 2024 19:10

ஒருவேளை கில் முதல்வராயிருந்தா இந்த எருமைக்கு துணை பொறுப்பையும் கொடுத்திருப்பார் போல , அவ்ளோ அன்பு


thiruvarangam_balu Balasundaram
நவ 15, 2024 18:57

இனிமேல் எருமை தீனி தின்கிற ஆள் புது பட்டம்


Smba
நவ 15, 2024 18:32

எருமையா பொறந்தாலும் அண்மோல் ஆ பொறக்கனும்


Ramanujadasan
நவ 15, 2024 18:11

இங்கே 4000 கோடி தின்ன எருமைகளும் இருக்கின்றன


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை