உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய 16 பேர் நாடு கடத்தல்

வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய 16 பேர் நாடு கடத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குவஹாத்தி: வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறிய 16 பேரை அசாம் மாநில போலீசார் கைது செய்தனர். அவர்கள் நாடு கடத்தப்பட்டனர் என அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.வங்கதேசத்தில் இருந்து இந்தியர்கள் அல்லாதவர்கள் நாட்டிற்குள் நுழைய முயற்சிப்பதைத் தடுக்க மாநிலப் படையும், எல்லைப் பாதுகாப்புப் படையும் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று அசாம் போலீசார் கூறியிருந்தனர். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சட்டவிரோத குடியேறிகள் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.அந்தவகையில், அசாம் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வருகின்றனர் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் நடத்திய தீவிர சோதனையில், வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறிய 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நாடு கடத்தப்பட்டனர்.இது குறித்து, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோத குடியேறிகள் 16 பேர் அசாமில் வசித்து வந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் நாடு கடத்தப்பட்டனர். ஒவ்வொரு சட்டவிரோத குடியேறிகளும் கைது செய்யப்பட்டு அசாமில் இருந்து நாடு கடத்தப்படுவார்கள், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

என்றும் இந்தியன்
நவ 02, 2025 19:57

என்ன நாடகம் இது???? 5 .6 கோடி பங்களாதேசிகள் இந்தியாவில் ஆதார் கார்டுடன் வாழ்கின்றனர் கொல்கத்தா தான் அதற்கு பெரிய சென்டர்???16 பேரை??? நாடு கடத்தினார்களாம்???


oviya vijay
நவ 02, 2025 18:37

என்கவுன்ட்டர் ஒன்றே வழி. தயவு தாட்சண்யம் பார்க்காமல் போட்டு தள்ள வேண்டும்


பேசும் தமிழன்
நவ 02, 2025 18:29

இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உபசரிப்பது வேறு யாரும் அல்ல.... நம்ம இண்டி கூட்டணி ஆட்கள் தான்.... அதனால் தான் இவர்களை போல கள்ளத்தனமாக ஊடுருவி வந்தவர்களின் ஓட்டுக்களை நீக்க கூடாது என்று கூறுகிறார்கள்.


Rathna
நவ 02, 2025 18:26

கள்ள குடியேறிகள் வங்காளத்தில் இருந்து அதிகமாக உள்ள வருகிறார்கள். அதற்கு அந்த தலைமை முதல் காரணம். திருப்பூர், கோவை, ஈரோடு போன்ற தமிழ்நாட்டு நகரங்களில் ஜார்கண்ட், மேகாலயா, திரிபுரா அட்ரஸ் உடன் இங்கு வந்து கார்மெண்ட்ஸ், கட்டிட தொழில், துணிக்கு சாயம் போடுவது, கோவை ஆட்டோமொபைல் பாக்டரிகள் ஆகியவற்றில் வேலை செய்கிறார்கள். பெண்கள் கூட்டமாக வந்து தவறான தொழில் செய்வதும் நடக்கிறது. பங்களாதேஷி ஒருவன் திருப்பூரில் ஒரு பேக்டரி முதலாளியை கொலை செய்து விட்டு தப்பித்து சென்றதும் இரண்டு ஆண்டுக்கு முன்னால் நடந்தது.


RAMESH KUMAR R V
நவ 02, 2025 18:03

சரியான முடிவு. கூடிய சீக்கிரத்தில் எல்லா இடத்திலும் இதுபோன்று நடவடிக்கையை துரிதப்படுத்தவும் அதுவே காலத்தின் கட்டாயம்.


Vijay D Ratnam
நவ 02, 2025 17:46

சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழையும் வங்கதேச கும்பலை கைது செய்து அவர்கள் நாட்டுக்கு அனுப்பாமல் ஃபாரினுக்கு அனுப்பலாம். உகாண்டா, சோமாலியா, காங்கோ, மொசாம்பிக், மடகாஸ்கர் போன்ற நாட்டுக்குள் கொண்டு போய் விடுவதை வழக்கமாக வைத்துக்கொள்ளவேண்டும். அந்த நாட்டுடன் இந்திய அரசு ஒப்பந்தம் செய்துகொண்டு அந்த நாடுகளுக்கு விவசாயம் தொழில், வர்த்தக ரீதியாக நன்மை ஏற்படும் வகையில் சில உதவிகளை செய்ய வேண்டும். அந்த நாட்டு அரசு இந்த வங்கதேசத்தினரை பயன்படுத்திக்கொள்ளட்டும்.


R. SUKUMAR CHEZHIAN
நவ 02, 2025 15:33

16 திருட்டு ஓட்டுகளும் 16 பேரின் வேலை வாய்ப்பும் காப்பாற்ற பட்டது. இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த தேசதுரோக கைக்கூலிகளையும் நாடு கடத்த வேண்டும்.


Field Marshal
நவ 02, 2025 17:37

சில வருடங்களில் பல்கி பெருகுவார்கள் ..முயலுக்கே போட்டி கொடுப்பார்கள்


Kumar Kumzi
நவ 02, 2025 15:23

இப்போது புரிகிறதா ஏன் கதறுகிறார்கள் என்று


திகழ்ஓவியன்
நவ 02, 2025 14:06

நம் உள்துறை இதையே இப்போ தான் கண்டுபிடிச்சாங்களா


vadivelu
நவ 02, 2025 15:02

ஆமாங்க, நேற்றுதான் 40000 ஆப்கனிஸ்தானியர் பாகிஸ்தானில் இருந்து வெளியேற்ற பட்டனர். இன்று நாம் பிடிச்ச சிலரை வெளியேற்றி இருக்கோம். . உங்க சப்தம் குறைந்த உடன் இன்னும் அதிகமாக வெளியேற்ற படுவார்கள்.


Kumar Kumzi
நவ 02, 2025 15:21

நீயெல்லாம் இன்பநிதிக்கும் போஸ்டர் ஒட்ட தான் லாயக்கு...


Kumar Kumzi
நவ 02, 2025 15:34

பங்களாதேஸ் கள்ளக்குடியேறிகளுக்கு ஓட்டுரிமை குடுக்கணும்னு கூவுறவரை கேட்டியா


krishna
நவ 02, 2025 16:29

THIGAZH OVIYAN UNNAI MUDHALIL PIDITHU NADU KADATHA VENDUM.


krishna
நவ 02, 2025 16:30

SIR NEENGA VERA THIGAZH OVIYAN POSTER OTTA KOODA LAAYAKKU ILLAI.


திகழ்ஓவியன்
நவ 02, 2025 19:10

கிருஷ்ணா அவர்களே இப்போ நான் கனடாவில் உள்ளேன் நாடு கடத்த தேவை இல்லை


N Sasikumar Yadhav
நவ 02, 2025 19:13

வங்கதேசவன்களுக்கு அடைக்கலம் கொடுத்து புள்ளிராஜா இன்டி கூட்டணி ஆட்களுக்கு வாக்குரிமை வாங்கி கொடுக்க உன்னய மாதிரியான ஆட்கள் நிறைய இருக்கிறானுங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை