உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்தீஸ்கரில் என்கவுன்டர் 18 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் என்கவுன்டர் 18 நக்சல்கள் சுட்டுக்கொலை

சுக்மா: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், 18 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்; பாதுகாப்பு படையினர் இருவர் காயம் அடைந்தனர்.சத்தீஸ்கரில் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு நக்சல்களின் ஆதிக்கத்தை முற்றிலும் ஒழிக்க, மத்திய - மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில், சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள கெர்லாபால் என்ற வனப்பகுதியில், நக்சல்களின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு சமீபத்தில் தகவல் கிடைத்தது. இதன்படி, நேற்று காலை 8:00 மணி அளவில் அந்த வனப்பகுதியில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மற்றும் மாவட்ட ரிசர்வ் படையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு மறைந்திருந்த நக்சல்கள், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே நீண்ட நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டையில், 18 நக்சல்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இந்த மோதலில், மாவட்ட ரிசர்வ் படையின் இரு வீரர்கள் காயமடைந்தனர். சம்பவ இடத்தில் இருந்து, ஏ.கே.-, 47 ரக துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர், கையெறி குண்டுகள், வெடி பொருட்கள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். சத்தீஸ்கரில் நடப்பாண்டில் இதுவரை மட்டும், 133 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.மாற்றத்தை கொண்டு வர முடியாது!சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில், 18 நக்சல்களை சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படையினருக்கு பாராட்டுகள். ஆயுதங்களை ஏந்தி வன்முறையில் ஈடுபடுவோரால் மாற்றத்தை கொண்டு வர முடியாது; அமைதி மற்றும் வளர்ச்சியால் மட்டுமே அது முடியும்.அமித் ஷாமத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ