உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.5,000 கொள்ளை 2 சிறுவர்கள் சிக்கினர்

ரூ.5,000 கொள்ளை 2 சிறுவர்கள் சிக்கினர்

புதுடில்லி:கடை உரிமையாளர் முகத்தில் மிளகாய் பொடியை துா வி, 5,000 ரூபாய் கொள்ளையடித்த, இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். ஜஹாங்கிர்புரி 'இ' பிளாக்கில் சுரேஷ் சந்த் என்ற நெக் சஹாய் என்பவர் கடைக்கு, மூன்று சிறுவர்கள் நேற்று முன் தினம் இரவு வந்தனர். கடையில் உள்ள பொருட்களை பார்த்துக் கொண்டிருந்த மூவரும், திடீரென மிளகாய் பொடியை சுரேஷ் சந்த கண்களில் துாவினர். அடுத்த சில நொடிகளுக்குள், கல்லாப் பெட்டியை துா க்கிக் கொண்டு தப்பினர். கல்லாவில், 5,000 முதல் 7,000 ரூபாய் வரை இருந்ததாக சுரேஷ் சந்த் கூறினார். இதுகுறித்து, ஜஹாங்கிர்புரி போலீசார் வழக்குப் பதிவு செய்து, கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர். மூன்று சிறுவர்களும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு, இரண்டு பேரை கைது செய்தனர். மேலும், ஒரு சிறுவனை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை