உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி.யில் கொடூரம்: வயலில் 2 சிறுவர்கள் கழுத்தறுத்து கொலை

உ.பி.யில் கொடூரம்: வயலில் 2 சிறுவர்கள் கழுத்தறுத்து கொலை

லக்னோ: உ.பி., மாநிலத்தில் வயலில் 2 சிறுவர்கள் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு; நவாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரின்ஸ் (12). இவர் பக்சா கிராமத்தில் வசிக்கும் தமது மாமா வீட்டுக்கு வந்துள்ளார். அவரின் மகன் அபிஷேக்(14). சிறுவர்கள் இருவரும் வியாழக்கிழமை மாலை வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டு இருந்தனர். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. கிராமத்தின் பல பகுதிகளில் அவர்களை குடும்பத்தினர் தேடியும் எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்திருந்தனர். இந் நிலையில் மறுநாளான வெள்ளியன்று (ஜன.24) இருவரின் சடலங்கள் அங்குள்ள கடுகு வயலில் கண்டெடுக்கப்பட்டன. அவர்களின் கைகள், கால்கள் கட்டப்பட்டு, கழுத்தறுத்துக் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களின் வாயில் துணி வைத்தும் திணிக்கப்பட்டு இருந்தது. தகவலறிந்த போலீசார், சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று சடலங்களை கைப்பற்றினர். இதுகுறித்து காவல்துறை எஸ்.பி., கவுரவ் குரோவர் கூறியதாவது; புகாரின் பேரில் இரண்டு சிறுவர்களையும் தேடி வந்தோம். காணாமல் போன மறுநாள் இருவரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டன. ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. முழு விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Azar Mufeen
ஜன 25, 2025 12:23

அனைத்தும் அறிந்தவன் இறைவன், அந்த இரு குழைந்தைகளும் படுகொலை செய்யப்படபோகிறார்கள் என்பதை அறிந்தும் தடுக்காமல் விட்ட இறைவனும் பாவி தானே, முதல் குற்றவாளி இறைவன் தான்


Ganapathy
ஜன 25, 2025 12:10

மம்தா அகிலேஷ் பப்பூ இவர்களின் தயவால் வரைமுறைகள் இல்லாமல் கள்ளக்குடி ரோஹிங்கியாகள்தான் ஊடுறுவல்தான் காரணம்.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 25, 2025 11:50

திராவிட மாடல், விடியல், உதய்ண்ணா, அப்புறம் என்ன.. ஆங்.. ஒன்கொள் கோவால் புற.. " எல்லாம் போட்டு ஏதாவது எழுதும் கூட்டம் எங்கிருந்தாலும் உடனே ஓடி விடவும்...


Barakat Ali
ஜன 25, 2025 14:15

எங்கே யார் கொலை செய்யப்படுவார்கள் என்று போலீசுக்கு ஜோசியமா தெரியும் என்று கேட்ட திராவிட மாடல் அடிமைகளின் முட்டு இதற்கும் பொருந்துமல்லவா ????


அப்பாவி
ஜன 25, 2025 10:58

யோகிநாத் கங்ஜா ஸ்னானம் ஆச்சா?


SANKAR
ஜன 25, 2025 11:14

aryavisham


Subramanian
ஜன 25, 2025 10:28

மிகவும் கொடூரமான செயல். இரண்டு பிஞ்சு குழந்தைகள் பரிதாபமாக உயிர் விட்டுள்ளன. ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


முக்கிய வீடியோ