உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கங்களால் குலுங்கிய ஹிமாச்சல்; மக்கள் அதிர்ச்சி

அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கங்களால் குலுங்கிய ஹிமாச்சல்; மக்கள் அதிர்ச்சி

சிம்லா: ஹிமாச்சல் பிரதேசத்தில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர்.சம்பா பகுதியில் இன்று அதிகாலை 3.27 மணியளவில் முதல் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 3.3 ஆக பதிவானது. அதன் பின்னர், மீண்டும் அதிகாலை 4.39 மணிக்கு அடுத்த நிலநடுக்கம் பதிவானது. ரிக்டரில் 4 ஆக பதிவான இந்நிலநடுக்கம், 10 கிமீ ஆழத்தை மையம் கொண்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், சேதங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை. ஒரே நாளில் மிக குறுகிய இடைவெளியில் அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கங்கள் பதிவானதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ