உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உஸ்பெகிஸ்தான் பெண் கொலை லாட்ஜ் ஊழியர்கள் 2 பேர் கைது

உஸ்பெகிஸ்தான் பெண் கொலை லாட்ஜ் ஊழியர்கள் 2 பேர் கைது

சேஷாத்திரிபுரம்: மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானை சேர்ந்தவர் ஜரீனா ஜெபரோவா, 27. சுற்றுலா விசாவில் பெங்களூரு வந்திருந்தார். சேஷாத்திரிபுரம் சாங்கே சாலையில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்தார். கடந்த 14ம் தேதி அறையை காலி செய்வதாக சொல்லி இருந்தார். ஆனால், வெளியே வரவில்லை. அறைக்கு போன் செய்தும் எடுக்கவில்லை.லாட்ஜில் உள்ள மாற்று சாவியை பயன்படுத்தி, அறையை திறந்து பார்த்தனர். ஜரீனா ஜெபரோவா கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.சேஷாத்திரிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. லாட்ஜில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, இரு ஊழியர்கள் மீது சந்தேகம் அடைந்தனர். அவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் இருவரும் கேரளாவுக்கு சென்றது தெரியவந்தது. அங்கு சென்று, அவர்களை கைது செய்து, பெங்களூரு அழைத்து வந்தனர்.இவர்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அம்ரித், 22, ராபர்ட், 26, என தெரிய வந்தது. இருவரும் ஜரீனா வைத்திருந்த பணத்தை அபகரிக்க திட்டமிட்டனர். அறையை சுத்தம் செய்வதாக கூறி உள்ளே நுழைந்து, அவர் கழுத்தை நெரித்துக் கொன்றது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

saravanan
மார் 18, 2024 11:17

இவர்களை தூக்கில் போடணும், சுற்றுலா வருபவர்களுக்கு ஆபத்து விளைவித்தால் தூக்கில் போடுவார்கள் என்ற பயம் இருக்கும்படி சட்டம் ஏற்ற வேண்டும்.


saravanan
மார் 18, 2024 11:12

evanka


மேலும் செய்திகள்













சமீபத்திய செய்தி