உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லாரி மீது வேன் மோதியதில் 2 ஆசிரியைகள் உயிரிழப்பு

லாரி மீது வேன் மோதியதில் 2 ஆசிரியைகள் உயிரிழப்பு

கோர்பா: சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் உள்ள பூண்டி உப்ரோடா கிராமத்தில் பழங்குடியின மேம்பாட்டுத்துறையால் நடத்தப்படும் ஏக்லவ்யா மாதிரி உறைவிடப்பள்ளி உள்ளது. இங்கு பணியாற்றும் ஆசிரி யைகள் உள்ளிட்ட 11 ஊழியர்கள் மற்றும் இரு மாணவர்கள், பள்ளிக்கு வேனில் நேற்று சென்றனர். அப்போது முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்ற வேன், எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில், வேனில் சென்ற 13 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் டில்லியை சேர்ந்த அஞ்சனா சர்மா, 30, ஹரியானாவை சேர்ந்த மஞ்சு சர்மா, 32, ஆகிய இரு ஆசிரியைகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற 11 பேர் கோர்பா, பிலாஸ்பூர், கட்கோரா மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ