உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2 வாக்காளர் அடையாள அட்டை: பீஹார் எம்.பி.,க்கு நோட்டீஸ்

2 வாக்காளர் அடையாள அட்டை: பீஹார் எம்.பி.,க்கு நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா:பீஹாரில், இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்திருந்ததாக, மத்தியில் ஆளும் தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி - ராம்விலாஸ் கட்சி எம்.பி., வீணா தேவிக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தற்போதே தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பீஹாரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளைத் தொடர்ந்து, கடந்த 1ல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மத்தியில் ஆளும் தே.ஜ., கூட்டணியில், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி அங்கம் வகிக்கிறது. இக்கட்சியைச் சேர்ந்த வீணா தேவி, வைஷாலி தொகுதி எம்.பி.,யாக பதவி வகிக்கிறார். இவரது கணவர் தினேஷ் சிங், மேல்சபை உறுப்பினராக உள்ளார். லோக் ஜனசக்தி எம்.பி., வீணா தேவி, அவரது கணவர் தினேஷ் சிங் ஆகியோர், இரண்டு அடையாள அட்டைகளை வைத்திருப்பதாக ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், பீஹார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் சமீபத்தில் குற்றஞ்சாட்டினார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி, வீணா தேவி, அவரது கணவர் தினேஷ் சிங் ஆகியோருக்கு தேர்தல் கமிஷன் நேற்று நோட்டீஸ் அனுப்பியது. முசாபர்பூர் சட்டசபை தொகுதியில், என் பெயர் எப்படி இடம் பெற்றது என, தெரியவில்லை. நான், சாஹேப்கஞ்ச் சட்டசபை தொகுதியின் வாக்காளர். இந்த விவகாரத்தை நாளிதழ்கள் மூலம் தெரிந்து கொண்டேன். உடனே, முசாபர்பூர் தொகுதியில் என் பெயரை நீக்க விண்ணப்பித்துள்ளேன். எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். அதை கண்டுகொள்ள வேண்டாம். வீணா தேவி லோக்சபா எம்.பி., - லோக் ஜனசக்தி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Tamilan
ஆக 15, 2025 12:54

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பின்?


Kasimani Baskaran
ஆக 15, 2025 04:07

தவறு இருந்தால் திருத்தத்தான் இப்படி ஒரு நடை முறை. அதை ஓட்டை சொல்வதால் ஒன்றும் ஆகப்போவது இல்லை.


தாமரை மலர்கிறது
ஆக 15, 2025 01:22

இரண்டு இடங்களிலும் மனு கொடுத்திருப்பார். அப்பருவல் ஆகி இருக்கும். இந்த சின்ன விஷயத்தை ஊதி பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை. இவர் ரெண்டு ஒட்டு போடுவதால் மட்டும் ஜெயிக்க முடியாது. உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் சிறு சிறு தவறுகள் நடப்பது இயல்புதான். இதற்காக ஒட்டு திருட்டு என்று கபடநாடாக்கம் ஆடத்தேவை இல்லை.


Priyan Vadanad
ஆக 15, 2025 08:08

உங்களைப் போன்றோர்களால் தாமரை உலர்கிறது.


Gokul Krishnan
ஆக 15, 2025 08:46

ஆஹா என்ன அற்புத விளக்கம் இதே போல் மற்ற எதிர் கட்சி எம் பி வைத்து இருந்தால் இதை தான் சொல்வீர்களா ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்த மறு நாளே ஏன் தேர்தல் ஆணையத்தின் வலைப்பக்கங்கள் டவுன் ஆனது அதுவும் குறிப்பாக பீகார் கர்நாடகா மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா மாநில வலை தளம்


Sangi Mangi
ஆக 15, 2025 11:27

எப்படி இப்படி மனசாட்சிக்கு விரோதமா பேசுறீங்க, மனசாட்சினு ஒன்னு உங்களுக்குருந்தால் தானே ???


V Venkatachalam
ஆக 15, 2025 18:59

பிரியன் வடநாட் தன்னோட பகுத்தறிவ பயன் படுத்தி கண்டு பிடித்த விஷயம் ரொம்பவே ஆச்சரியமா இருக்கு.‌ எனக்கு ஒரு டவுட்டு,உதய சூரியன் ன்னு ஒரு பினாத்தல் ரொம்ப வருஷமா ஓட்டிக்கிட்டு இருக்காய்ங்களே இவிங்க ஒரு விஷயத்தை இன்னிக்கு வரை தெளிவாக்கலை. இவனுங்க போட்டு இருக்கும் படம் இரண்டு மலை இடுக்கில் சூரியன் உதிக்குதாம். ஏன் அந்த சூரியன் இரண்டு மலை இடுக்கில் மறையாதா?சூரியன் மலை இடுக்கில் தான் உதிக்குமா? சம வெளியில் கடற்பரப்பில் உதிக்காதா? இதுக்கு பகுத்தறிவு என்ன பதில் சொல்லுது? இந்த பக்கம் மலையை காமிச்சு அந்த பக்கம் அந்த மலையை உடைச்சு கொள்ளையடிக்கிறானுங்க.


சமீபத்திய செய்தி