உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறுவன் ஓட்டிய கார் மோதி 2 வயது குழந்தை பலி

சிறுவன் ஓட்டிய கார் மோதி 2 வயது குழந்தை பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியின் பஹர்கஞ்ச் என்ற இடத்தில் பங்கஜ் அகர்வால் என்பவரின் 15 வயது மகன், கடந்த ஞாயிறு அன்று, தன் தந்தையின், 'ஹூண்டாய் வெனியு' காரை ஓட்ட முயன்றார். அப்போது, அவரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் குடும்பத்தினரின், 2 வயது பெண் குழந்தை, வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்தது.காரை லேசாக முன்நோக்கி நகர்த்திய அந்த சிறுவன், அந்த குழந்தை விளையாடி கொண்டிருந்த இடத்திற்கு, 1 மீட்டர் துாரத்தில் நிறுத்தி, குழந்தை நகர்ந்து செல்லும் என காத்திருந்தார்.குழந்தை நகர்ந்து சென்றிருக்கும் என கருதி, காரை வேகமாக இயக்கியதால், காரின் முன்பக்க இடது டயரில் சிக்கி குழந்தை பலியானது.குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்தவர்கள், காரை பின் நகர்த்தி, டயரின் கீழே சிக்கியிருந்த குழந்தையை மீட்டு, மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு அந்த குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர்.அந்த சிறுவன் மீது வழக்கு பதிந்த போலீசார், அவரின் தந்தையை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கின்றனர். நம் நாட்டில், 18 வயது நிரம்பாதவர்கள் கார், பைக் போன்ற வாகனங்களை இயக்க அனுமதியில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

अप्पावी
ஏப் 01, 2025 09:37

அந்த கார் மேலேதான் தப்புன்னு தூக்கி ஜெயில்லே வெச்சிருங்க எஜமான். அப்புடியே வூட்டில் ரகசிய அறை ஒண்ணு கட்டிக்கோங்க.


Raj
ஏப் 01, 2025 07:12

முதலில் பெற்றோர்களை பிடித்து சிறையில் அடைக்க வேண்டும், அந்த சிறுவனை பிடித்து சிறார் சிறையில் போட வேண்டும். இதில் என்ன விசாரணை வேண்டியிருக்கிறது. நீதிமன்றம் போனால் நீதிபதி 2 வயது குழந்தையை ஏன் சாலையில் விளையாடவிட்டீர்கள் என்று கேள்விகளால் துளைப்பார். கேவலமான இந்திய சட்டங்கள் குற்றவாளிக்கு பாதுகாப்புதான் கையூட்டு என்ற பெயரில்.


முக்கிய வீடியோ