உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகாவில் விஷம் வைத்து கொல்லப்பட்ட 20 குரங்குகள்; வனத்துறை தீவிர விசாரணை

கர்நாடகாவில் விஷம் வைத்து கொல்லப்பட்ட 20 குரங்குகள்; வனத்துறை தீவிர விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கூடலுார்; கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியில் விஷம் வைத்து, 20 குரங்குகள் கொல்லப்பட்ட சம்பவம், வனத்துறையை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கடந்த வாரம் விஷம் வைத்து, 5 புலிகள் கொல்லப்பட்டன. மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சாம்ராஜ் நகர் மாவட்டத்தில், நேற்று விஷம் வைத்து, 20 குரங்குகள் கொல்லப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட குரங்குகள் உடல்களை, பந்திப்பூர் புலிகள் காப்பகம் ஒட்டிய கேம்பனஹல்லி பகுதியில் வீசி சென்றுள்ளனர்.கர்நாடக வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்து, உயிருக்கு போராடி கொண்டிருந்த சில குரங்குகளை மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். வனத்துறையினர் கூறுகையில்,'குரங்குகள் வேறு பகுதியில் விஷம் வைத்து கொல்லப்பட்டு, அதன் உடலை துாக்கி வந்து இப்பகுதியில் வீசி சென்றிருக்க வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சாம்ராஜ்நகர் பகுதிகளில் விசாரணை மேற்கொண்டுள்ளோம்,'என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

RRR
ஜூலை 04, 2025 11:49

சமூக ஆர்வலர்கள், PETA , விலங்கு ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆகிய பெயர்களில் திரியும் போலி போராளிகள் எல்லாம் இப்ப ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பாங்க... தீபாவளி சமயத்தில் மட்டும் முழிச்சுகிட்டு கதறுவானுங்க...


V RAMASWAMY
ஜூலை 04, 2025 10:10

மிருகங்கள் மீது அக்கறை தேவை தான், அதே சமயம் மனித உயிர்களின் மீதும் அக்கறை கொள்ளுங்கள். மிருகங்களால் மக்கள் உயிர்களுக்கு ஆபத்து வந்தால் அதற்கு என்னென்ன நடவடிக்கைகள்? தற்பொழுதுள்ள சட்ட திட்டங்கள் மிருகங்களுக்கு தொந்திரவு செய்யும் மனிதர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்து அச்சுருத்தல் செய்கின்றனவே தவிர, அவர்களை மிருகங்களிடமிருந்து பல வீடுகளில் வைத்திருக்கும் கொடூர செல்லப்பிராணிகளிடமிருந்து காப்பாற்ற எவ்வித சட்டம் பூர்வ நடவடிக்கைகளும் இல்லை. இவை அத்திவாசியம்.


எவர்கிங்
ஜூலை 04, 2025 08:54

அரசு நடவடிக்கை எடுக்காத தெருநாய்கள் பிரச்சனையில் இது போன்ற நடவடிக்கை எடுப்பவர்களை வாழ்த்தலாம்


அப்பாவி
ஜூலை 04, 2025 08:52

அடடே அனுமார் பிறந்த இடம் கர்னாடகாவாச்சே...


அருண், சென்னை
ஜூலை 04, 2025 08:49

ராம் ராம்... என்ன கொடுமை...யாரைதான் வாழவிடுவார்களோ இந்த கெடுகெட்ட கொடுறர்கள்.. மனிதன் இன்னோரு மனிதனை கொடுராமாக கோலிக்ரான், யானனை கொள்கிறான், குரங்குகளை கொள்கிறான், புலிகளை கொள்கிறான், என்ன ஜென்மம்டா..இழிபிரவி இந்த மனிதன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை