சத்தீஸ்கரில் 20 நக்சல்கள் சரண்
சுக்மா: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில், நக்சல்களின் வலிமையான ராணுவ அமைப்பாக கருதப்படும், பி.எல்.ஜி.ஏ., எனப்படும், மக்கள் விடுதலை கெரில்லா பட்டாலியனை சேர்ந்த ஒன்பது பெண்கள் மற்றும் 11 ஆண்கள் என 20 நக்சல்கள் மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் முன் நேற்று சரணடைந்தனர். இதில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட பி.எல்.ஜி.ஏ., உறுப்பினர் ஷர்மிளா, மேற்கு பஸ்தார் டிவிஷன் நக்சல் பர்மிளா ஆகியோர் தலைக்கு தலா 8 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தனர். இவர்கள் தவிர மேலும் 9 பேர் உட்பட 11 நக்சல்களுக்கு மொத்தம் 33 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. மாநில அரசின், 'உங்கள் நல்ல கிராமம்' திட்டத்தால் ஈர்க்கப்பட்டு 20 நக்சல்கள் சரண் அடைந்துள்ளனர். அவர்களின் மறுவாழ்வுக்கு தலா 50,000 ரூபாய் நிதியுதவி வழங் கப்பட உள்ளதாக போலீஸ் எஸ்.பி., கிரண் சவான் கூறினார்.