உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாரணாசி ரயில் நிலையத்தில் தீ: 200 டூவிலர்கள் சேதம்

வாரணாசி ரயில் நிலையத்தில் தீ: 200 டூவிலர்கள் சேதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாரணாசி:வாரணாசி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 200க்கும் ஏற்பட்ட டூவிலர்கள் எரிந்து சேதமடைந்தன.உ.பி., மாநிலம் வாரணாசியின் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தின் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இன்று( நவ.,30) அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்டது. இது மளமளவென பரவி அங்கிருந்த வாகனங்களுக்கும் பரவியது. இதனால், அங்கிருந்த 200க்கும் மேற்பட்ட டூவிலர்கள் எரிந்து சேதமடைந்தன. இதில் பெரும்பாலான வாகனங்கள் ரயில்வே ஊழியர்களுக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.12 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ரயில்வே போலீசார், உள்ளூர் போலீசார் உதவியுடன் இரண்டு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். 'ஷார்ட் சர்க்யூட்' காரணமாக தீவிபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அருணகிரி
நவ 30, 2024 20:18

அம்பது டூ வீலருக்குக் கூட அங்கே இடமிருக்காது. ஆனா 200 டூ வீலர் வெச்சு காசு பாப்பாங்க.


Perumal Pillai
நவ 30, 2024 19:57

Vande Bharat stone pelters?


சாண்டில்யன்
நவ 30, 2024 19:46

விடாதீங்க.யாராவது ரெண்டுபேரை பிடிச்சி பாக்கிஸ்தான் இல்லை வங்காள தேசம்தான் லேட்டஸ்ட் தூண்டுதலால் இதை செய்துள்ளார்கள் என்று கதை வசனம் தயாரிக்க சொல்லணும்


Sathyanarayanan Sathyasekaren
நவ 30, 2024 20:31

சாண்டில்யன் , இந்த பெயரில் கருத்து எழுந்ததே. இது உண்மை பெயர் இல்லை என்று அனைவருக்கும் தெரியும். உம்மை போன்றவர்கள் பாகிஸ்தானில் இருக்க வேண்டியவர்கள்.கோவை குண்டை சிலிண்டர் விபத்து என்று சொன்னவர் தானே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை