உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 200 ஆண்டுகள் பழமையான அரசுப் பள்ளி கட்டட மேற்கூரை இடிந்து விபத்து!

200 ஆண்டுகள் பழமையான அரசுப் பள்ளி கட்டட மேற்கூரை இடிந்து விபத்து!

ஆலப்புழா: கேரளாவில், 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. விடுமுறை நாளில் இந்த சம்பவம் நிகழ்ந்ததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.இதுபற்றிய விவரம் வருமாறு: ஆலப்புழா மாவட்டத்தில் கார்த்திகப்பள்ளி என்ற இடத்தில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் வயது கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் ஆகும்.இன்று பள்ளிக்கு விடுமுறை என்பதால் வளாகத்தில் யாரும் இல்லை. தலைமை ஆசிரியர் அறைக்கு அருகில் பள்ளியின் அலுவலக அறை உள்ளது. இந்த அறையின் மேற்கூரை எதிர்பாராத விதமாக பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது. சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு பள்ளிக்குள் சென்று பார்த்தனர். அப்போது, பள்ளிக்கட்டட மேற்கூரை இடிந்து விழுந்திருப்பதையும், பள்ளி ஊழியர்கள் சிலர் இடிபாடுகளை அகற்றிக் கொண்டு இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அவர்கள் இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கையில் இறங்கினர். மேற்கூரை இடிந்த விழுந்த அறையைக் கடந்து தான் தினமும் மாணவர்கள் தலைமை ஆசிரியர் அலுவலகம் வருவார்கள். ஆசிரியர்களும் இந்த வழியை பயன்படுத்துவது உண்டு.நல்வாய்ப்பாக விடுமுறை நாளில் இந்த அசாதாரண சம்பவம் நடந்ததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இடிந்து விழுந்த பள்ளி அலுவலக அறைக்கான நிரந்தர கட்டட ஸ்திரத்தன்மை சான்றிதழ் ஊராட்சி நிர்வாகத்தால் கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. மாறாக, தற்காலிக கட்டட உறுதிச்சான்றிதழ் மட்டுமே வினியோகிக்கப்பட்டு உள்ளது.இதே பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு வந்தாலும் அதன் பணிகள் காலதாமதம் ஆகி வருகிறது. அதன் காரணமாக மாணவர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து பழைய அறைகளையே பயன்படுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை