உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சந்தோஷம், கண்ணீரை கர்நாடகாவுக்கு கொடுத்த 2024

சந்தோஷம், கண்ணீரை கர்நாடகாவுக்கு கொடுத்த 2024

* அமைச்சர் ராஜினாமாகர்நாடக பழங்குடியினர் நல துறைக்கு உட்பட்ட வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் சூப்பிரண்டாக பணியாற்றியவர் சந்திரசேகர், 52. இவர் கடந்த மே 27ம் தேதி, தனது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆணையத்திற்கு அரசு ஒதுக்கிய 189 கோடி ரூபாயில் 89 கோடி ரூபாய், வேறு வங்கிக் கணக்குகளுக்கு சட்டவிரோதமாக மாற்றப்பட்டு உள்ளது. இதற்கு என்னையும் உடந்தையாக இருக்க கூறி நெருக்கடி கொடுக்கின்றனர் என்று, கடிதம் எழுதி இருந்தார்.இதுகுறித்து விசாரித்த சி.ஐ.டி., போலீசார், ஆணையத்தின் முன்னாள் எம்.டி., பத்மநாபா, கணக்காளர் பரசுராமை கைது செய்தனர். பழங்குடியினர் நல அமைச்சராக இருந்த, நாகேந்திரா ஜூலை 7ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இந்த வழக்கை விசாரித்த அமலாக்கத்துறை, ஜூலை 13 ம் தேதி நாகேந்திராவை கைது செய்தது. அக்டோபர் 16 ம் தேதி ஜாமினில் வந்தார்.================காங்., கோஷ்டி அரசியல்முடா வழக்கில் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதும், முதல்வர் பதவியை பெற, துணை முதல்வர் சிவகுமார் மறைமுகமாக காய் நகர்த்தினார். இதற்கு சித்து ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முதல்வர் பதவி துண்டு போடும்படி, அமைச்சர்கள் பரமேஸ்வர், சதீஷ் ஜார்கிஹோளியை சித்தராமையா துாண்டி விட்டார்.சிவகுமார் ஆதரவாளர்கள் தங்கள் தலைவருக்கு, முதல்வர் பதவி வேண்டும் என்று குரல் எழுப்பினர். இதனால் சித்து, சிவா ஆதரவாளர்கள் இடையில் வார்த்தை மோதல் ஏற்பட்டது. அமைச்சர்களுக்கு எதிராக பேச ஆரம்பித்த, மூத்த எம்.எல்.ஏ.,க்கள் தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்டதால் கோஷ்டி மோதல் உருவானது. ஒருவழியாக மேலிடம் தலையிட்டு, அனைவரையும் சமாதானம் செய்து உள்ளது.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ