பெண் அடித்து கொலை 21 பேருக்கு ஆயுள்
துமகூரு: கிராமத்தில் கோவில் கட்ட முற்பட்ட பெண்ணை அடித்து கொன்ற 21 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.துமகூரு, கோலாப்பூர் கிராமத்தில் தபா ஹொன்னம்மா, 45, என்ற பெண் வசித்து வந்தார். இவர் இரண்டு முறை கிராம பஞ்சாயத்து தேர்தலில் நின்று தோல்வி அடைந்தார். கோபாலபுரா கிராமத்தில் கோவில் கட்ட முற்பட்டார். இதனால் ஒரு தரப்பினரின் கோபத்திற்கு ஆளானார்.கடந்த 2010ம் ஆண்டு, ஜூன் 28ம் தேதி அன்று, கிராம மக்கள், அவரை கற்களால் அடித்துக் கொன்றனர். இந்த கொலை, நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஹந்தனகெரே போலீசார், 27 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அப்போதைய டி.எஸ்.பி., சிவருத்ரசாமி குற்றபத்திரிகையை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.துமகூரு மாவட்ட மூன்றாவது அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. குற்றம் சாட்டப்பட்ட 27 பேரில், ஆறு பேர் இறந்து விட்டனர். 21 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், ஒவ்வொருவரும் தலா 13,500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது. 14 ஆண்டுகளுக்கு பின் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.