உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அம்பானியும், அதானியும் இருக்கும் பட்டியலில் 21 வயது இளைஞருக்கும் இடம்!

அம்பானியும், அதானியும் இருக்கும் பட்டியலில் 21 வயது இளைஞருக்கும் இடம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்திய பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ள கைவல்யா வோராவுக்கு வயது 21 மட்டுமே; அவரது பங்குதாரரான ஆதித் பலோச்சுக்கு 22 வயதே ஆகியுள்ளது.இந்தியாவின் டாப் பணக்காரர்கள் பட்டியலை நேற்று ஹூருன் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது. அதில், கவுதம் அதானி முதலிடம், முகேஷ் அம்பானி இரண்டாம் இடத்தில் உள்ளனர். பல்லாண்டுகளாக இந்திய தொழில் துறையில் பழம் தின்று கொட்டை போட்ட அம்பானியும், அதானியும் இருக்கும் பட்டியலில், 21 மற்றும் 22 வயது நிரம்பிய இளைஞர்கள் இருவரும் இடம் பெற்றிருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.அந்த 21 வயது நிரம்பிய இளைஞர் கைவல்யா வோரா, 22 வயது நிரம்பிய இளைஞர் ஆதித் பலிச்சா இருவரும், ஸ்டான்போர்டு பல்கலையில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவராக இருந்து பாதியில் படிப்பை கைவிட்ட நண்பர்கள்.இருவரும் சேர்ந்து 2021ல் ஜெப்டோ என்னும் விரைவு வணிக செயலியை தொடங்கினர்.கோவிட் காலத்தில், பொருட்களை வீடு தேடிச்சென்று டெலிவரி செய்வதற்கான தேவை அதிகம் இருந்தது.'கான்டாக்ட்லெஸ் டெலிவரி' என்பது தான் செயலியின் அடிப்படை. அதற்கு தகுந்தபடி தங்கள் நிறுவனத்தை உருவாக்கினர். வாடிக்கையாளர்களுக்கு மளிகை பொருட்களை விற்பனை செய்வது தான் இந்த செயலியின் வேலை.அமேசான், இன்ஸ்டாமார்ட், பிக்பாஸ்கெட் ஆகியவற்றுடன் போட்டியிட்டு இந்த நிறுவனம் அமோக வளர்ச்சி கண்டது. இதன் காரணமாக, நாட்டின் முன்னணி கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்த இளைஞர்கள் இருவரும் இடம் பெற்றுள்ளனர். கைவல்யா வோராவின் சொத்து மதிப்பு 3,600 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆதித் பலிச்சாவின் சொத்து மதிப்பு 4,300 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

theruvasagan
ஆக 30, 2024 17:39

ஒத்த நயாபைசா கூட முதல் போடாம லட்சத்தி எழுவத்தாராயிரம் கோடி முப்பதினாயிரம் கோடி சம்பாரிச்சவங்களை ஏன் சாதனையாளர்கள்னு சொல்ல மாட்டேங்குறாங்க.


hariharan
ஆக 30, 2024 10:48

அவங்க ரெண்டு பேருமே மேல்சாதிக்காரங்கன்னு அதுனால கொள்ளையயடிச்சு பணம் சேத்துட்டாங்கன்னு இங்க நம்ம குருமா கூவுவாரு.


Kumar Kumzi
ஆக 30, 2024 08:34

அடப்போங்கப்பா நம்பில் சின்னையா முப்பதாயிரம் கோடி ஓவா கஷ்ட்ட படாமலேயே ஒழைச்சருல்ல இப்போ கன்சா யாவாரம்மும் கொடிகட்டி பறக்குது


VENKATASUBRAMANIAN
ஆக 30, 2024 08:14

இவர் தொழில் செய்கிறார்கள். லட்சக்கணக்கான வர்களுக்கு வேலை கொடுக்கிறார்கள். ஆனால் இங்கே மக்களை சுரண்டி சொத்து சேர்த்து மற்றவர்களை குறை சொல்லுகிறார்கள்.


Kalyanaraman
ஆக 30, 2024 07:52

ஒரு சக இந்தியர் பணக்காரப் பட்டியலில் முன்னேறுவது பெருமைக்குரியது. வெறும் டெலிவரியில் இவ்வளவு பணம் இருக்கா? அப்..பா... என்ன மாதிரியான யோசனை.


Varadarajan Nagarajan
ஆக 30, 2024 07:28

தொழில் முனைவோருக்கான முனைப்பும் புதிய யுக்தியும் இருந்தால் சாதிக்கலாம். அதற்க்கு வயது ஒரு தடை இல்லை. ஆனால் பலருக்கு உழைக்காமல் குறுக்கு வழியில் சம்பாதிக்கும் எண்ணம்தான் அதிகமாக உள்ளது


hariharan
ஆக 30, 2024 07:03

இவங்களா இவ்வளவு சம்பாதிச்சாங்க? நமக்கெல்லாம் தாத்தா களவாண்ட சொத்துததாம்பா இருக்கு, ஆனால் அதுவே இன்னும் 100 தலைமுறைக்கு போதும்.


முக்கிய வீடியோ