உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி.,யில் நடப்பட்டுள்ள 210 கோடி மரங்கள்: முதல்வர் ஆதித்யநாத் பெருமிதம்

உ.பி.,யில் நடப்பட்டுள்ள 210 கோடி மரங்கள்: முதல்வர் ஆதித்யநாத் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோரக்பூர்: கடந்த 8 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 210 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளதாக உ.பி. முதல்வர் ஆதித்யநாத் கூறினார்.தேசிய துாய்மை காற்று திட்டம் குறித்த தேசிய மாநாடு கூட்டம் கோரக்பூரில் நடைபெற்றது.இம்மாநாட்டில் ஆதித்யநாத் கலந்துகொண்டு பேசியதாவது:மாநிலத்தில் தொழில்துறை வளர்ச்சி மற்றும் நகரமயமாக்குதல் ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ள நிலையிலும் கடந்த 8 ஆண்டுகளில், மாநிலம் முழுவதும் 210 கோடி மரங்கள் வெற்றிகரமாக நடப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தின் வனப்பகுதி கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த பாரம்பரிய மரங்கள் நடும் முயற்சி, , உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள வனத்துறை ஆய்வு மையம் மற்றும் சத்தீஸ்கர் பல்கலை கண்காணிப்பில் நடந்தது.காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு, காற்றின் தரத்தை மேம்படுத்துவது மற்றும் உயிரியல் பல்வகைமையை மேம்படுத்துவது ஆகியவற்றுக்காக மாநிலம் மேற்கொண்ட முயற்சியின் ஒரு பகுதியாகும். இந்த முன்முயற்சி, தேசிய பசுமை இந்தியா திட்டம் போன்ற தேசிய இலக்குகளுடன் இணைந்து, சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான மாநிலத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. இந்நடவடிக்கையால் அதிகரித்த வனப்பகுதி, சுற்றுச்சூழல் சமநிலை, நீர் பாதுகாப்பு மற்றும் கிராமப்புற வாழ்வாதாரங்களில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு ஆதித்யநாத் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

தமிழன்
மார் 14, 2025 01:13

நட்டீங்க சரி அதை பராமரிப்பு செய்தார்களா?? அதுதான் தேவை நடுவது பெரிய விசயமே இல்லை


தாமரை மலர்கிறது
மார் 14, 2025 00:22

உண்மையான பசுமை புரட்சி.


சிட்டுக்குருவி
மார் 13, 2025 23:44

ஒவ்வொரு மனிதனுக்கும் பெண்களும் சேர்ந்து ஆரோக்கியத்துடன் வாழ 40 மரங்கள் தேவை என்று ஒரு கணக்கீடு உள்ளது. அது பூர்தி செய்யபட்டுள்ளதா என்று ஆராய்ந்து அறிந்து மரங்கள் நடுவதொடில்லாமல் நன்றாக வரர்கின்றதா என்றும் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். அப்போதுதான் இயற்க்கை சீற்றங்கள் தடுக்கப்படும். உத்திரப்பிரதேசத்தில் சுமார் 28 கோடி மக்கள் இருப்பதாக கணக்கீடு. தேவையான மரங்கள் 1120 கோடிகளாகும். அதேபோல் தமிழ்நாட்டிற்கு தேவையான மரங்கள் 320 கோடிகலாகும். ஒவ்வொருவருடமும் மரம் நடுவதாக செய்திகள் வருகின்றன. ஆனால் மரங்களைதான் காணோம்.புதியதாக காட்டில் உள்ள மரங்களை வெட்ட அனுமதிக்கும் இணையதளம் ஏற்படுத்தி இருப்பதாகவும் மரங்களை வெட்ட மனு பதிவேற்றலாம் என்று ஒரு செய்தியைபார்தேன்.ஆறு,மலை ,குட்டை,குளம் விளைநிலம்,சதுப்பு நிலம் எல்லாம் கொள்ளை முடிந்துவிட்டது.இப்போது காட்டிற்க்கும் வந்துவிட்டது வினை. எந்த ஒரு காட்டிலும் இருக்கும் மரங்களை வெட்ட காட்டின் அருகில் வாழும் மக்கள் அனுமதிக்க கூடாது. கீழே காற்றில் விழும் மரங்களை மட்டுமே அகற்ற அனுமதிக்கவேண்டும்.காட்டின் மரங்கள் அழிந்தால் மனித குலத்தின் அழிவு நெருங்கிவிட்டது என்று அறிந்து கொள்ளலாம்.மக்களே விழிதிருங்கள்.ஒவ்வொரு மனிதரும் தங்களுக்கான 40 மரங்களை வருடத்திற்கு ஒன்று நட்டு மரமாகும்வரை நீர்விடுங்கள்.தங்களுக்கு என்று இடம் தேவை இல்லை.பொது இடங்களை ஆட்சியாளர்களின் உதவியுடன் கண்டறியுங்கள்.வனபாதுகாப்பு துறை இலவச மரக்கன்றுகளை கொடுப்பார்கள்.அரசு மரம் வெட்டும் இணையதளத்தை கைவிடவேண்டும்.


T.sthivinayagam
மார் 13, 2025 20:55

அதில் எத்தனை மரங்கள் தமிழர்கள் வரி பணம் என்று தமிழர்கள் கேட்கின்றனர். தமிழர்கள் வரி பணத்தை உபிக்கு தருவது பிரதமருக்கு அழகா என்று தமிழர்கள் கேட்கிறார்கள்.


N Sasikumar Yadhav
மார் 14, 2025 06:01

பிரிவினைவாதம் பேசுற திருட்வாளர் கோபாலபுர கொத்தடிமையார் அவுர்களே தமிழர்கள் கட்டுகிற வரியை அப்படியே நலதிட்டங்களுக்கு செலவிடுகிறது மோடிஜி தலைமையிலான மத்தியரசு . ஆட்டய போட வழியில்லாத காரணத்தால் திராவிட மாடல் தலிவர் சத்தம் போடுகிறார்


Vijay D Ratnam
மார் 13, 2025 20:40

கடுப்ப கெளப்பாதீங்கயா, பேசாம போயிடுங்க. இங்க வந்து அவரைப்பற்றி பேசி எங்க வயித்தெரிச்சல கொட்டிக்காதீங்க. நாங்களே நமக்குன்னு வந்து வாய்ச்சிருக்கே ஒரு தத்தி–னு செம்ம காண்டுல இருக்கோம்.


Ramesh Sargam
மார் 13, 2025 20:16

தமிழகத்தில் நாளுக்கு நாள் பெருகும் டாஸ்மாக் கடைகள், போதைப்பொருள் விநியோகம், ஊழல், பாலியல் கொடுமைகளைக்கண்டு, தமிழக முதல்வர் பெருமிதம்.


venugopal s
மார் 13, 2025 20:06

மஹாகும்பமேளாவில் பங்கெடுத்தவர்கள் கணக்கு போல் தானே இதுவும்? அடிச்சு விடுங்க, யார் கேட்கப் போகிறார்கள்?


kr
மார் 13, 2025 19:05

Planting alone is not sufficient. How many these have survived and grown is more important. In TN also, when JJ was alive, their party announced planting of 65 lakh saplings on her birthday. Not sure how many were planted and how many survived to become trees today


ராமகிருஷ்ணன்
மார் 13, 2025 17:51

வருங்காலங்களில் நல்ல மழை பெய்து விவசாயிகள் வளம்மிக்க மாநிலமாக மாறும். தமிழகத்தில் திமுக ஆட்சியில் கள்ளசாராயம், அபின் கஞ்சா வளர்த்து, மக்களை அழித்து திமுகவினர் செழித்து வாழ்கிறார்கள். இதான்டா திராவிட விடியல் மாடல் என்று வாய்ச்சவடால் வேறு, காலக்கொடுமை.


N Sasikumar Yadhav
மார் 13, 2025 17:03

தமிழக திராவிட களவானிங்க மாதிரி ஸ்டிக்கர் ஒட்டாமல் மரம் நடுவதற்கு உதவி செய்தவர்களை நன்றியோடு கூறுகிறார்


புதிய வீடியோ