உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 24 பணியிடம்...! அப்ளை பண்ணியதோ 21,000 பேர்! உத்தரகண்ட் வேலையில்லா திண்டாட்டம்

24 பணியிடம்...! அப்ளை பண்ணியதோ 21,000 பேர்! உத்தரகண்ட் வேலையில்லா திண்டாட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டேராடூன்: ஊர்க்காவல் படையில் உள்ள 24 பணியிடங்களுக்கு 21,000 பேர் விண்ணப்பித்துள்ள சம்பவம் உத்தரகண்டில் அரங்கேறி இருக்கிறது. வேலைகள் இருக்கிறது, திறன்மிக்க தகுதியான ஆட்கள் இல்லை என்பதே தொழில் நிறுவனங்களின் புலம்பலாக இருக்கிறது. படித்த படிப்புக்கு வேலையில்லை என்று பட்டதாரிகள் ஒரு பக்கம் கவலையில் இருப்பதும் பார்க்க முடிகிறது.இந் நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் ஊர்க்காவல் படையில் 24 பயிற்றுவிப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டன. இதில் விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதி 12ம் வகுப்பு மட்டுமே. வயது வரம்பு 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.ஆனால் கிட்டத்தட்ட 21,000 பேர் இந்த 24 பணியிடங்களுக்கும் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பம் அனுப்பியவர்களில் 70 சதவீதம் பேர் பட்ட மேற்படிப்பு படித்து முடித்தவர்கள் என்பது தான் கொஞ்சம் அதிர்ச்சி. இதில் கர்வால் மண்டலத்தில் இருந்து மட்டுமே 12,000 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. குமாவோன் மண்டலத்தில் இருந்து 8,500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.வெறும் 24 பணியிடங்களுக்கு 21,000 பேர் விண்ணப்பித்து இருப்பது, அம்மாநிலத்தில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தையே காட்டுவதாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
நவ 04, 2024 18:12

உ.பி, குஜராத்துக்கு போயிடுங்கோ. ஒரே ஆளுக்கு 4 வேலை கொட்டிக் கிடக்குது.


ஆரூர் ரங்
நவ 04, 2024 13:52

நம்ம குரூப் 4 தேர்வுக்கு எத்தனை லட்சம் பேர் விண்ணப்பிக்கிறார்கள்? அங்குள்ள சுற்றுப்புற சூழல் பாதிப்புக்கான எதிர்ப்பு காரணமாக அதிகமான பெரிய ஆலைகள் அமைவதில் சிக்கல் உள்ளது .மேக வெடிப்பு போன்ற ஆபத்துக்கள். துறைமுகம் இல்லாததால் ஏற்றுமதி இறக்குமதி சாத்தியமில்லை. . தனியார் வேலைவாய்ப்பு குறைவு.


HARENDRA SKS 1 std - B
நவ 04, 2024 13:03

IT IS UTTER FOOLISH. THIS IS THE GOVERNMENT JOB SO PEOPLE ARE TRYING. PEOPLE WANTS GOVERNMENT JOB ONLY. BECAUSE NO ACCOUNTABILITY & POWER. THERE IS NO RELATION WITH UNEMPLOYMENT. OUR IS PRIVATE CONCERN, WE ARE OFFERING SALES & MARKETING JOB, VERY FEW CANDIDATES RESPOND THAT TOO OLD PEOPLE. NO YOUNG CANDIDATES. GIVE PROPER INFO.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை