உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2014 முதல் இந்தியா - சீனா எல்லையில் ஊடுருவல் இல்லை; மத்திய அரசு தகவல்

2014 முதல் இந்தியா - சீனா எல்லையில் ஊடுருவல் இல்லை; மத்திய அரசு தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 2014ம் ஆண்டு முதல் சட்டவிரோதமாக ஊடுருவியவர்கள் 23,926 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கதேச எல்லையில் ஊடுருவல் அதிகம்; சீன எல்லையில் எந்த ஊடுருவல் முயற்சியும் நடக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.ஊடுருவல் தொடர்பாக லோக்சபாவில் திரிணமுல் காங்கிரஸ் எம்பிக்கள் எழுப்பிய கேள்விக்கு உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் எழுத்துப்பூர்வமாக வழங்கிய அறிக்கையில்; இந்திய எல்லையை ஒட்டியுள்ள அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், நேபாளம், பூடான் ஆகிய நாடுகளில் இருந்து, 2014ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை, 20,806 பேர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தாண்டின் ஜனவரி முதல் நவம்பர் வரையில் 3,120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதிகபட்சமாக இந்தியா - வங்கதேசத்தில் இருந்து 18,851 பேர் ஊடுருவ முயன்றுள்ளனர். மியான்மரில் இருந்து 1,165 பேரும், பாகிஸ்தானில் இருந்து 556 பேரும், நேபாளம் - பூடானில் இருந்து 234 பேரும் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்று கைதாகியுள்ளனர். இதன்மூலம், இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு எல்லைப்பகுதிகளில் ஊடுருவல் முயற்சிகள் அதிகளவில் இருப்பதை இந்தப் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. அதேவேளையில், வடக்கே சீனாவுடனான எல்லையில் ஊடுருவல் சம்பந்தப்பட்ட வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை. 2025ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையில் இந்தியா - வங்கதேச எல்லைப் பகுதியில் 2,556 பேர் ஊடுருவ முயன்று கைதாகியுள்ளனர். பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற 49 பேரை எல்லைப் பாதுகாப்பு படையினர் சிறை பிடித்துள்ளனர், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தானுடனான எல்லையில் 93 சதவீதம் பகுதிகளும், வங்கதேசத்துடனான எல்லையில் 80 சதவீதம் பகுதிகளிலும் வேலி அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Saleemabdulsathar
டிச 17, 2025 15:26

அப்படி என்றால் சீனா ஊடுருவிய பகுதி எல்லாம் யாருக்கு சொந்தமானது


பாலாஜி
டிச 17, 2025 13:22

இந்திய பகுதியில் நுழைந்து சாலைகள் கிராமங்கள் சீனா அமைத்தது.


Venugopal S
டிச 17, 2025 12:41

பாகிஸ்தான் வங்காள தேச எல்லைகளில் அந்த நாட்டின் ஆட்கள் மட்டும் தான் ஊடுறுவுகின்றனர்.ஆனால் சீனாவுடனான எல்லையில் சீன நாடே ஊடுறுவி நமது பகுதிகளைப் பிடிக்கிறது என்பதை மறைத்து ஊடுறுவலே இல்லை என்று பெருமை கொள்வது கேவலம்!


RAMAKRISHNAN NATESAN
டிச 17, 2025 15:58

இது சட்ட விரோதமாக இந்தியாவுக்குள்ளே நுழையும் மக்களின் எண்ணிக்கை ........ இந்தக் கருத்தைப் படிக்கவில்லையா ? செய்தியையும் பிடிக்கவில்லையா ?


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 17, 2025 12:35

20,806 பேர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.... எதுக்கு விதம் விதமா சமைச்சு பரிமாறவா >>>>


Barakat Ali
டிச 17, 2025 11:55

அப்போ அஞ்சு வருஷம் முன்னாடி 2020 ல கல்வான் பள்ளத்தாக்கில் நடந்தது என்ன ????


தத்வமசி
டிச 17, 2025 12:12

இது சட்ட விரோதமாக இந்தியாவுக்குள்ளே நுழையும் மக்களின் எண்ணிக்கை.


Barakat Ali
டிச 17, 2025 11:49

அப்படின்னு சீனா அறிவிக்கச் சொன்னதா? ஊடுருவலைத் தடுக்குறீங்க.. ஆனா இல்லன்னு எப்படிச் சொல்லலாம்?? வெளிநாட்டு ஏடு ஒன்றில் 10 நவம்பர் 2022 இல் வெளியான கட்டுரை... Chinese incursions into India are increasing, strategically planned New study finds incursions into Aksai Chin region are not random, independent events.


AKM KV SENTHIL MUSCAT
டிச 17, 2025 11:13

ஹா ஹா ஹா


புதிய வீடியோ