உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபரிமலையில் 29 நாளில் 22.6 லட்சம் பேர் தரிசனம்: வருமானம் ரூ.163 கோடி

சபரிமலையில் 29 நாளில் 22.6 லட்சம் பேர் தரிசனம்: வருமானம் ரூ.163 கோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சபரிமலை: சபரிமலையில் 15 நாட்களில் 22.67 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். இக்காலகட்டத்தில் ரூ.163.89 கோடி வருமானம் கிடைத்துள்ளது.சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் துவங்கிய நிலையில், நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதனால், அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பக்தர்கள் சுமூகமாகவும், பாதுகாப்பாகவும் தரிசனம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.இந்நிலையில், தேவஸ்தான அதிகாரிகளின் கணக்குப்படி, நவ.,16 முதல் டிச., 14 ம் தேதி வரையிலான 29 நாட்களில் சபரிமலையில் 22.67 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இது கடந்தாண்டை விட கூடுதலாக 4,51,043 பேர் தரிசனம் செய்துள்ளனர்.அதேபோல், இதேகாலகட்டத்தில் வருமானமும், ரூ.22.76 கோடி அதிகரித்து, ரூ.163.89 கோடி வசூல் ஆகி உள்ளது. அரவணை விற்பனை மூலம் ரூ.82.67 கோடியும், உண்டியல் வருமானம் மூலம் ரூ.52.27 கோடியும் வசூல் ஆகி உள்ளது. சீசன் முடிவதற்குள் இன்னும் 15 லட்சம் பேர் சபரிமலை வருவார்கள் என தேவசம்போர்டு எதிர்பார்க்கிறது. மேலும் சுமூகமான தரிசனத்தை சாத்தியமாக்கிய அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தேவசம்போர்டு கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

வைகுண்டேஸ்வரன் V
டிச 15, 2024 22:28

ஸ்வாமியே சரணம் ஐயப்பா


aaruthirumalai
டிச 15, 2024 21:36

வருமானம் 164 கோடி இது ஆன்மீகமா? வியாபாரமா?


RAMAKRISHNAN NATESAN
டிச 15, 2024 19:56

தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டும் மாநிலத்தின் கோவிலுக்கு நாம் ஏன் வருமானம் தேடித்தரவேண்டும் ? விஜயகாந்த் இருபதாண்டுகளுக்கு முன்பு கேட்ட கேள்வி .....


சமீபத்திய செய்தி