உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மகளிர் ஊக்கத்தொகை வாங்கிய 2,289 மஹா., அரசு ஊழியர்கள்

மகளிர் ஊக்கத்தொகை வாங்கிய 2,289 மஹா., அரசு ஊழியர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவில் செயல்படுத்தப்படும் மகளிர் ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் பயன் பெற்றவர்களில், 2,289 பேர் அரசு ஊழியர்கள் என்பது தெரியவந்துள்ளது.மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., அடங்கிய மஹாயுதி கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. கடந்தாண்டு நவம்பரில் சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. அதற்கு முன், கடந்தாண்டு ஆகஸ்டில் மகளிர் ஊக்கத் தொகை திட்டத்தை மஹாயுதி கூட்டணி அரசு அறிவித்தது.இதன்படி, 21 - 65 வயதுக்குட்பட்ட தகுதியுள்ள பெண்களுக்கு, மாதம், 1,500 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். அரசு பெண் ஊழியர்கள் இந்த ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது என்று கூறப்பட்டிருந்தது.இந்நிலையில், தேசியவாத காங்.,கைச் சேர்ந்த மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அதிதி தட்கரே, சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவு:மகளிர் ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிப்போரின் விண்ணப்பங்கள் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. இது ஒரு தொடர் நடவடிக்கை.இவ்வாறு ஆய்வு செய்தபோது, 2,289 அரசு ஊழியர்கள், இந்த திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகையை பெற்று வந்தது தெரியவந்துள்ளது.தகுதியுள்ளவர்களுக்கே அரசின் திட்டப் பலன்கள் சென்றடைய வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Neelachandran
ஜூன் 01, 2025 17:34

பரிசீலனைக்குப் பிறகுதானே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். எனில் தண்டனைக்கு உரியோர் இருவர். ஒருவர் விண்ணப்பதாரர்.மற்றொருவர் பரிசீலித்தவர்.அதிரடி நடவடிக்கை இருந்தால்தான் நிர்வாகம் தூய்மையாகும்.


Ramesh Sargam
ஜூன் 01, 2025 12:54

ராணுவ ஆட்சி வந்தால்தான் இதுபோன்ற குற்றங்களுக்கு சரியான முடிவு.


R.RAMACHANDRAN
ஜூன் 01, 2025 07:39

இப்படிப்பட்ட குற்றவாளிகளை பணிகளில் வைத்துக் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்திய அரசமைப்பு படி இயங்காமல் மனம் போன போக்கில் செயல்படுகின்றன.


அசோக்
ஜூன் 01, 2025 06:39

மகா ஊழல். டபுள் இஞ்சின் சர்க்கார்.


ராஜா
ஜூன் 01, 2025 04:33

வடக்கன்ஸ் எல்லாம் பிராடு பயலுக தான் போல


தாமரை மலர்கிறது
ஜூன் 01, 2025 04:22

பாட்னவிஸ் ஆட்சியில் யாரும் திருட முடியாது என்பதற்கான சாட்சி தான் இது. அடுத்த பிரதமர் பாட்னவிஸ் தான்.


Manaimaran
ஜூன் 01, 2025 04:01

குட்டி சுவராக்கும் திராவிட மாடலின் திட்டம் இதுக்கெல்லாம் கோர்ட்டு உள்ள வராதா


முருகன்
ஜூன் 01, 2025 07:11

திராவிடத்தை காப்பி அடிப்பது தானே உங்கள் வேலை பிறகு ஏன் வருத்தம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை