உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மியான்மர் சைபர் மோசடி கும்பலில் சிக்கிய இந்தியர்கள் 270 பேர்; இன்று நாடு திரும்பினர்

மியான்மர் சைபர் மோசடி கும்பலில் சிக்கிய இந்தியர்கள் 270 பேர்; இன்று நாடு திரும்பினர்

புது டில்லி: மியான்மர் சைபர் மோசடி மையத்தில் சிக்கி வலுக்கட்டாயமாக வேலை பார்த்து வந்த இந்தியர்கள் 270 பேர் இன்று நாடு திரும்பினர்.மியான்மரில் உலக மோசடிகளின் தலைநகரம் என அழைக்கப்படும் மியாவாட்டி பகுதி உள்ளது. வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பிக்கும் அப்பாவிகளை வரவழைத்து அவர்களை மிரட்டி சைபர் வேலையில் ஈடுபடுத்தும் துணிகர செயலை சர்வதேச மாபியா கும்பல் செய்து வருகிறது.இத்தகைய செயல் இங்குள்ள கே.கே. பார்க்கின் சைபர் கிரைம் மையத்தில் நடப்பதாக கண்டறிந்த அந்நாட்டு அரசு கடந்த மாத இறுதியில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், 28 நாடுகளைச் சேர்ந்த 1,500 சிக்கினர். இதில் இந்தியர்கள் 500 பேரும் அடங்குவர். அவர்களை நாடு திருப்பி அனுப்பும் முயற்சியில் நமது துாதரகம் ஈடுபட்டுள்ளது.இது குறித்து பாங்காக்கில் உள்ள இந்திய துாதரகம் தெரிவித்துள்ளதாவது:இந்திய விமானப்படை இயக்கும் இரண்டு சிறப்பு விமானங்கள் மூலம் 26 பெண்கள் உட்பட 270 இந்தியர்களை, மே சோட்டில் இருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப தாய்லாந்து அரசு ஏற்பாடு செய்தது.மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்தியர்களை திருப்பி அனுப்புவதை உறுதிசெய்ய தாய்லாந்து மற்றும் மியான்மரில் உள்ள இந்திய தூதரகங்கள் அந்தந்த அரசாங்கங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன.மீதமுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்காக இந்தியா நாளை கூடுதல் விமானங்களை இயக்க உள்ளது.இவ்வாறு இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Kasimani Baskaran
நவ 07, 2025 03:58

சர்வதேச அளவில் சைபர் குற்றங்கள் குறையும்..


Ramesh Sargam
நவ 07, 2025 00:36

மோசடி கும்பலில் சிக்கியவர்களை மீட்டு அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பிய மியான்மர் அரசு, ஏன் அவர்கள் நாட்டில் உள்ள அந்த மோசடி கும்பலில் உள்ளவர்களை பிடித்து, சிறையில் அடைத்து கடுமையாக தண்டிக்கக்கூடாது.


ஆரூர் ரங்
நவ 07, 2025 11:20

மியான்மர் ராணுவ JUNTA தளபதிகள் எக்காலத்திலும் மாமூலை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.


Venugopal, S
நவ 07, 2025 00:26

இவர்களை கான் க்ரூஸ் ஆளும் மாநிலங்களில் வேலை கொடுக்க வேண்டும். அங்கே தான் பாலாறும் தேனாறும் ஓடுது. ஒருத்தன் வெளிநாட்டில் போய் தாய் நாட்டைப் பற்றி கேவலமாக பேசும் பிறவி


மணிமுருகன்
நவ 06, 2025 23:20

அருமை. வரவேற்கிறேன். இனியாவது இளைஞர் இளைஞிகள் வசதி வாய்ப்பு மோகத்தில் தவறான இடத்தில் சிக்கிக் கொள்ளாமல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.


ஆரூர் ரங்
நவ 06, 2025 22:07

மியான்மரில் ஆளும் ராணுவ ஆட்சியே இந்த அயோக்கிய நிறுவனங்கள் தரும் மாமூலில்தான் வாழ்கிறது.


தாமரை மலர்கிறது
நவ 06, 2025 21:04

சைபர் மாபியா கும்பல் இந்தியர்களை கொத்தடிமைகளாக வைத்து மிரட்டி, மற்றவர்களின் சொத்துக்களை சூறையாடியது. கொத்தடிமைகளும் விடுவிக்கப்பட்டார்கள் . சைபர் மாபியாவும் ஒழிக்கப்பட்டது.


rajasekaran
நவ 06, 2025 21:00

வடிவேலு மாதிரி சென்னை வந்து இறங்கியதும் இங்குள்ள தமிழக அமைச்சர் ஸ்டாலின் ஏற்பாட்டில் தான் தாயகம் திருப்பினார்கள் என்று அவர்களுக்கு ஒரு 10 ரூபாய் துண்டு போடுவார்கள்.


M.Sam
நவ 06, 2025 20:22

ஆஹா ஆஹா அற்புதம் அப்பறம் இந்தியாவின் பெருமையை கட்டி காத்த மாவீரர்கள் எவரக்ள் எவர்களுக்கு ஒரு சலூட் நாம ஆகுக ஏமாத்திரத்தில் கேட்டு காரனுக்கு போல அனால் யாரு இவனுக என்பது தான் கேள்வி இனி வரும் பாரு அதில் போரிக்கும் நம்ம மக்கள் யாரு என்று


suresh Sridharan
நவ 06, 2025 20:20

இனி இவர்களுடைய பாடு திண்டாட்டம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் அவலம் வேறு வழியும் இல்லை பூனைகள் என்னென்ன செய்யும் என்று சொல்லி தெரிவது இல்லை


புதிய வீடியோ