உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சூரத் விமான நிலையத்தில் 28 கிலோ தங்கம் பறிமுதல் : துபாயில் இருந்து கடத்தி வந்த தம்பதி கைது

சூரத் விமான நிலையத்தில் 28 கிலோ தங்கம் பறிமுதல் : துபாயில் இருந்து கடத்தி வந்த தம்பதி கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சூரத்: பேஸ்ட் வடிவத்திலான 28 கிலோ தங்கத்தை உடலில் மறைத்துக் கட்டி, துபாயில் இருந்து கடத்தி வந்த குஜராத் தம்பதியை, சூரத் விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.குஜராத் மாநிலம் சூரத் விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து ஏர் இந்தியா ஐஎக்ஸ்-174 விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்திறங்கிய ஒரு தம்பதி மீது சந்தேகமடைந்த மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர், அவர்களை சோதனையிட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1o2t5kva&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தம்பதியரை சோதித்ததில் அவர்களின் உடல்பகுதியில் நடுப்பகுதி மற்றும் மேல் உடல்பகுதிகளில் மொத்தம் 28 கிலோ தங்க பேஸ்ட் மறைத்து கட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் அந்த ஆணிடம் 12 கிலோ தங்கமும், பெண்ணிடமிருந்து 16 கிலோ தங்கமும் இருந்தது. மொத்தம் 28 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் குஜராத்தை சேரந்தவர்கள் என தெரியவந்துள்ளது.சூரத் விமான நிலைய வரலாற்றில் இதுவே மிகப்பெரிய தங்க கடத்தலாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Baskar
ஜூலை 22, 2025 20:51

மர்ம கூட்டம் இல்ல , எல்லாம் நாட்டை அழிக்கின்ற கும்பல்


அப்பாவி
ஜூலை 22, 2025 20:21

அதெப்படி துபாய்ல இதையெல்லாம் செக் பண்ண மாட்டாங்களா... இதே மாதிரிதான் மலேசியாவிலிருந்து பாம்பு, பல்லியெல்லாம்.கடத்திட்டு வந்தா கேப்பாரில்லை.


ராஜா
ஜூலை 22, 2025 18:48

அந்த மாநிலத்தில் உள்ள துறைமுகமே கடத்தல் மன்னர்களுக்கு சொந்தமான இடம், விமான நிலையம் மற்றும் தரைவழி மற்றும் பிற சலுகைகளை பயன்படுத்தி நாட்டை ஆட்டைய போடும் தொழில் செய்து வருகின்றனர்,


Mario
ஜூலை 22, 2025 18:22

குஜராத் மாடல்


வாய்மையே வெல்லும்
ஜூலை 22, 2025 20:41

அதெப்படி மர்மநபர்களை தாண்டி குஜராத் மாடல் எங்கிருந்து வந்தது. குறிப்பிட்ட நபர்களின் திருட்டுத்தனத்தை வெளியே சொல்ல முடியாத நிலையில் உங்களின் வாயில் பெவி குவிக் ஓட்டிக்கிட்டு இருக்கு போல ..


aaR Kay
ஜூலை 22, 2025 16:15

மர்ம கூட்டத்தை சேர்ந்த நபர்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை