உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யமுனையில் குளித்த 3 சிறுவர்கள் உயிரிழப்பு

யமுனையில் குளித்த 3 சிறுவர்கள் உயிரிழப்பு

புதுடில்லி:தலைநகர் டில்லியில் யமுனை ஆற்றில் குறித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நீரில் அடித்துச் செல்லப்பட்ட மற்றொரு மாணவனை தேடும் பணி நடக்கிறது.உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத் லோனி ராம்பார்க்கில் வசித்த நான்கு சிறுவர்கள் நேற்று முன் தினம் காலை 11:00 மணிக்கு யமுனை ஆற்றில் குளிக்கச் சென்றனர்.மாலை வரை வீடு திரும்பாததால், பெற்றோர் தேடி வந்தனர். புதுடில்லி புராரி அருகே யமுனை கரையில் நான்கு பேரின் உடைகள் இருந்தன.இதையடுத்து, போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீஸ் மற்றும் தீயணைப்புப் படையினர் யமுனை ஆற்றில் தேடுதல் வேட்டை நடத்தினர்.மூன்று மாணவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. மற்றொரு மாணவனை தேடும் பணி மும்முரமாக நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ