வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Santhakumar Srinivasalu
அக் 11, 2026 15:42
இது எந்த சதிகாரர்கள் செய்த வேலை?
பெலகாவி: கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம் ஹத்தரகி சுங்கச்சாவடி அருகே துர்கா சிலை ஊர்வலம் நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெலகாவியிலிருந்து சிலையை எடுத்துக்கொண்டு ஹூஞ்சியனட்டி கிராமத்திற்குத் திரும்பிய போது, பக்தர்கள் மீது லாரி மோதியது. இதில், பிரகாஷ், மகேஷ் மற்றும் தானேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் குறித்து எமகனமரடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது எந்த சதிகாரர்கள் செய்த வேலை?