உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உச்சநீதிமன்றத்திற்கு 3 நீதிபதிகள் பெயர் பரிந்துரை; அவர்கள் யார்? யார்?

உச்சநீதிமன்றத்திற்கு 3 நீதிபதிகள் பெயர் பரிந்துரை; அவர்கள் யார்? யார்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உச்சநீதிமன்றத்திற்கு 3 நீதிபதிகளை தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அண்மையில் முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா மற்றும் திரிவேதி ஆகியோர் ஓய்வு பெற்றனர். இதனால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு மூன்று காலியிடங்கள் உருவாகின. தற்போது 31 நீதிபதிகள் கொண்டு உச்ச நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலீஜியம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மூவரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பரிந்துரை செய்துள்ளது. பரிந்துரை செய்யப்பட்ட நீதிபதிகள் விபரம் பின்வருமாறு:1. கர்நாடகா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அன்ஜாரியா.2. கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிஸ்னோய்,3. மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துர்கர்.கொலிஜீயத்தின் இந்த பரிந்துரைகள் அங்கீகரிக்கப்பட்டால், உச்சநீதிமன்றம் அதன் முழு அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதிகள் எண்ணிக்கையுடன் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

c.mohanraj raj
மே 27, 2025 15:27

நாட்டுப்பற்றும் கலாச்சார பற்றும் இல்லாதவனை எல்லாம் நீதிபதி ஆக்கக்கூடாது அதுவும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக


Arinyar Annamalai
மே 26, 2025 23:15

கொலிஜியம் ஒரு ஊழல்/பரிந்துரை/வாரிசு முறையினால் உருவாக்கப்பட்டுள்ளது . ஒழித்துக் கட்டபட வேண்டிய தேர்வு முறை.


venugopal s
மே 26, 2025 22:50

உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறை, சி பி ஐ போல் ஆகாமல் நடுநிலையோடு இருக்க வேண்டும் என்றால் மத்திய பாஜக அரசின் தலையீடு இன்றி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் இப்போது உள்ள கொலீஜியம் முறையில் தொடர வேண்டும்! ஜனநாயகம் தழைக்க வேண்டும்!


மீனவ நண்பன்
மே 26, 2025 22:24

சொம்பு வெத்தலை பாக்கு தான் கட்ட பஞ்சாயத்துக்கு பிரதானம் ..எப்போ அறிமுகம் ஆகும் ?


Bharath
மே 26, 2025 22:23

வக்கீல்கள் நீதிபதிகள் ஆக வரக் கூடாது. நீதிபதிகள் தனியே அதற்கு உள்ள தகுதியுடன் வர வேண்டும். கொலிஜியம் கலைக்கப்பட வேண்டும்.


Murugesan
மே 26, 2025 22:19

எல்லா ஊழல் அரசியல்வாதிகளையும் அயோக்கியர்களை காப்பாற்ற இன்னும் மூன்று ஆட்கள் கூடுதலாக


ஆரூர் ரங்
மே 26, 2025 21:55

தமிழகத்தை சேர்ந்த நீதிபதிகள் பெயர் பரிசீலிக்கப்படுவதாக வதந்தி பரவினால் உடனே இங்கிருந்து ஒவ்வொருவரையும்பற்றி நூற்றுக்கணக்கான மொட்டைக் கடிதங்களை தலைமை நீதிபதிக்கு அனுப்பி கெடுத்து விடுவது வழக்கம். இதனாலேயே சுப்ரீம் கோர்ட்டில் தமிழ் நீதிபதிகள் நியமிக்கப்படுவது அபூர்வமாகிவிட்டது என்பர்.


GMM
மே 26, 2025 21:38

மத்திய அரசு உயர் பதவியில் உள்ள நேர்மையான பொருளாதாரம், பொறியியல், மருத்துவம் போன்ற பல துறை அதிகாரிகளை பகுதி, மாலைநேர சட்டம் பயில செய்து நீதிபதிகள் பதவிக்கு தயார் செய்ய வேண்டும். கூடுதல் பணியாக அரசு வக்கீல் பணி செய்ய சட்டம், நிர்வாக அனுமதி பெற வேண்டும். வக்கீல் நீதிபதியாகும் முறை நீதி மன்றத்தை சீர் திருத்தம் செய்ய விடாது. ? கொலிஜியம் பரிந்துரையில் ஒருவர் அரசு பரிந்துரையில் ஒருவர் என்று நியமித்தால், காலப்போக்கில் நீதிபதி அரசு தேர்வு முறை செயலுக்கு வந்து விடும்.


Anantharaman Srinivasan
மே 26, 2025 22:51

50 வயதுக்கு மேற்பட்ட அதிகாரிகள் சட்டம் பயின்று straightaway நீதிபதிகள் ஆகி experience எதுவுமில்லாமல் தீர்ப்பு சொன்னால் சரிவருமா..?


தாமரை மலர்கிறது
மே 26, 2025 21:34

சிறந்த நீதிமான்களாக உள்ள ஜி ஆர் சுவாமிநாதன், லட்சிமி நாராயண் போன்றோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக அறிவிக்க வேண்டும்.


Vidhya, Coimbatore
மே 26, 2025 22:06

Pls chk the history of Hon Justices whom you mentioned. Pls google their Names and see. You can see what they were earlier amd in which association. If u are a hardcore follower of bjp then there is nothing wrong in supporting him. But as a common man we expect people who are not biased and true to their heart.


மீனவ நண்பன்
மே 26, 2025 22:22

அவா சரிப்பட்டு வருவாளா …


Nada Rajan
மே 26, 2025 21:07

இந்தச் செய்தியை படித்து தான் உச்ச நீதிமன்றத்தில் 34 நீதிபதிகள் மொத்தம் என்பதை தெரிந்து கொண்டேன் நன்றி


சமீபத்திய செய்தி