வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Building யில் உள்ள தூண்களை இடிப்பது நுனி கிளையில் இருந்து அடி கிளையை வெட்டுவது போல ஆகும்
கோலார்: கர்நாடகாவில் 3 மாடி வீடு ஒன்று அப்படியே சரிந்து விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.இதுபற்றிய விவரம் வருமாறு; கோலார் மாவட்டத்தில் உள்ள பங்காரபேட் நகரத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. அங்குள்ள தண்டு சாலை பகுதியில் ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான 3 மாடிகள் கொண்ட வீடு உள்ளது. 3 குடும்பங்கள் அந்த வீடுகளில் வசித்து வந்தனர்.அந்த குடியிருப்பு வளாகத்தின் கீழ்தள பகுதியில் பராமரிப்பு வேலைகள் நடைபெற்று வந்தன. அதற்காக, அங்குள்ள தூண் ஒன்றை இடிக்கும் வேலையில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர். பராமரிப்பு வேலை காரணமாக அங்கு குடியிருந்த 3 வீடுகளைச் சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னரே பணிகள் தொடர்ந்தன.நிச்சயம் இடிந்து விழக்கூடும் என்ற எண்ணி அப்பகுதி மக்கள் தூரத்தில் இருந்தபடி வீட்டை வேடிக்கை பார்த்தபடி இருந்தனர். அவர்கள் பார்க்க, பார்க்க அனைவர் கண்முன்னே 3 மாடி வீடு அப்படியே பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது.இதை அங்குள்ள மக்கள் தங்கள் செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை பலரும் பார்த்து பகிர்ந்து வரும் நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Building யில் உள்ள தூண்களை இடிப்பது நுனி கிளையில் இருந்து அடி கிளையை வெட்டுவது போல ஆகும்