உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓசி விமான பயணத்துக்காக கஞ்சா கடத்திய 3 பெண்கள் கைது

ஓசி விமான பயணத்துக்காக கஞ்சா கடத்திய 3 பெண்கள் கைது

மும்பை: இலவச விமான பயணத்துக்கு ஆசைப்பட்டு, தாய்லாந்தில் இருந்து மும்பைக்கு 8.6 கோடி ரூபாய் மதிப்புள்ள உயர்தர கஞ்சா கடத்திய மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர்.தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் இருந்து மஹாராஷ்டிராவின் மும்பைக்கு மூன்று இந்திய பெண்கள் கஞ்சா கடத்துவதாக சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 3ம் தேதி காலை மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த விமானத்தில் இருந்து இறங்கிய மூன்று பெண்களின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அவர்களிடம், 8.6 கிலோ உயர்தர கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. விசாரணையில் அவர்கள் டில்லியை சேர்ந்த பிரியங்கா, 44, ம.பி.,யின் போபாலை சேர்ந்த இஷிகா கல்தரி, 19, குஜராத்தை சேர்ந்த அஸ்மா பானோ ரஷப் என தெரியவந்தது. இதில் இருவர், கஞ்சாவை கடத்தி வந்தால், இலவசமாக விமானத்தில் வெளிநாடு செல்லலாம் எனக் கூறியதை நம்பி, போதைப்பொருள் கடத்தி சிக்கியதாக தெரிவித்தனர். அவர்கள் வைத்துஇருந்த, 8.6 கோடி ரூபாய் கஞ்சாவை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் மூவரையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.மூவருக்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ