உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மங்களூரு நீச்சல் குளத்தில் மூழ்கி இளம்பெண்கள் 3 பேர் பலி!

மங்களூரு நீச்சல் குளத்தில் மூழ்கி இளம்பெண்கள் 3 பேர் பலி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மங்களூரு: மங்களூருவில் ரிசார்ட்டில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதுபற்றி போலீசார் கூறி உள்ளதாவது; உச்சிலா கடற்கரை அருகே உள்ள ரிசார்ட் ஒன்றில் நேற்று (நவ.16) நிஷிதா, பார்வதி, கீர்த்தனா என்ற 3 இளம்பெண்கள் அறை எடுத்து தங்கி உள்ளனர். மைசூரை சேர்ந்த 3 பேரும் இன்று காலை உறங்கி எழுந்தனர்.அவர்களில் ஒருவர் ரிசார்ட் அறையின் அருகே இருந்த நீச்சல் குளத்துக்குச் சென்றுள்ளார். 6 அடி ஆழம் கொண்ட நீர் நிரம்பிய குளத்தில் நீராட முடிவு செய்து உள்ளே இறங்கி உள்ளார். எதிர்பாராத விதமாக, கால் இடறி நீச்சல் குளத்தில் தவறி விழுந்துள்ளார்.அவரின் அலறல் கேட்ட மற்ற 2 இளம்பெண்கள், காப்பாற்ற சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் 2 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர். ஒரே நேரத்தில் 3 இளம்பெண்கள் நீச்சல் குளத்தில் பலியான சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், சடலங்களை கைப்பற்றி விசாரணையை தொடங்கி உள்ளனர். ரிசார்ட்டில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா? அதன் காரணமாகவே 3 பேரும் பலியானார்களா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Mr Krish Tamilnadu
நவ 17, 2024 23:47

மற்ற இருவரும் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்து, அவர்களும் மரணம் என்பது.நிச்சயம் நம்பும்படி இல்லை. பாலியல் ரீதியான ஏதோ ஒரு பிரச்சினை. மூடி மறைக்கிறது நிர்வாகம். பாத்ரூம் கேமரா அல்லது இரவு தொந்தரவு - நிர்வாகத்துக்கே வெளிச்சம்.


visu
நவ 17, 2024 20:57

நீச்சல் குளம் இருந்தால் அங்கே ஒரு உதவியாளர் 24 மணி நேரம் இருக்க வேண்டும் இல்லாவிட்டால் இதெல்லாம் நடக்கும்


Vijay D Ratnam
நவ 17, 2024 20:25

நம்பும்படி இல்லியே. கஞ்சா அல்லது மது போதையில் இருந்தார்களா.


GMM
நவ 17, 2024 20:01

ரிசார்ட்ல் நீச்சல் குளம் இருந்தால், தங்குபவர் நீச்சல் விவரம் கட்டாயம் பதிய வேண்டும். தற்காப்பு உபகரணம், நீச்சல் தெரிந்த செக்யூரிட்டி இருக்க வேண்டும். 3 இளம் பெண்களின் பெற்றோர், உறவினர் நண்பர்களுக்கு கடும் வேதனை தரும் செய்தி.


முக்கிய வீடியோ