உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சோலார் பேனல் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்: பட்ஜெட்டில் அறிவிப்பு

சோலார் பேனல் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்: பட்ஜெட்டில் அறிவிப்பு

புதுடில்லி: 1 கோடி வீடுகளில் மொட்டை மாடியில் சோலார் பேனல் அமைத்தால் மாதத்திற்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம் என மத்திய இடைக்கால பட்ஜெட்டில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதன்மூலம் மாதம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை வருமானம் ஈட்டலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று (பிப்.,1) இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் தாக்கல் செய்தார். அதில் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற அடுத்த 5 ஆண்டுகளில் முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், அடுத்த 5 ஆண்டுகள் வளர்ச்சிக்கானது எனவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=st2vh3uy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:

* அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டித்தரப்படும். தகுதியான நடுத்தர வர்க்கத்தினர் தங்களது சொந்த வீடு வாங்க அல்லது வீடு கட்டும் திட்டத்தை மத்திய அரசு துவங்கும்.* 1 கோடி வீடுகளில் மொட்டை மாடியில் சோலார் அமைத்தால் மாதத்திற்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம்* நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரிகளை அதிகரிப்பது தொடர்பாக தனிக்குழு அமைக்கப்படும்* ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்ய புதிய செயலி அறிமுகம் செய்யப்படும்.* கர்ப்பப்பை கேன்சரை தடுக்க 9 முதல் 14 வயதுள்ள பெண்களுக்கு தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

ரூ.1 லட்சம் கோடி

* ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும்.* மீன்வளத்துறையில் 55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.* ஆஷா, அங்கன்வாடி பணியாளர்களுக்கு காப்பீடு திட்டம் விரிவுப்படுத்தப்படும்.* நாடு முழுவதும் 41 ஆயிரம் ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் தரத்திற்கு உயர்த்தப்படும்.* சரக்கு ரயில் போக்குவரத்துக்காக பிரத்யேகமாக வழித்தடங்கள் செயல்படுத்தப்படும்.* மெட்ரோ ரயில் திட்டங்கள் மேலும் பல நகரங்களுக்கு விரிவுப்படுத்தப்படும்.

சுற்றுலா

* நாட்டில் உள்ள விமான நிறுவனங்கள் புதிதாக 1000 விமானங்கள் வாங்க உள்ளன. * உதான் திட்டத்தில் புதிதாக 517 தடங்களில் மலிவு விலை விமான சேவை துவங்க திட்டம்.* லட்சத்தீவை பிரதான சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.* சுற்றுலாத்துறையை மேம்படுத்த வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும்.* ஆன்மிக சுற்றுலாவுக்கு பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

நிதி பற்றாக்குறை

* 2023-24ல் திருத்தப்பட்ட மதிப்பீட்டின் படி அரசின் செலவு ரூ.40.90 லட்சம் கோடி.* 2024-2025ல் நாட்டின் நிதி பற்றாக்குறை 5.1 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்தப்படும்.* 2025-26ம் ஆண்டிற்குள் நிதி பற்றாக்குறை 4.5 சதவீதத்திற்கும் கீழ் குறைக்க திட்டம்.* 10 ஆண்டுகளில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2.4 மடங்கு அதிகரித்துள்ளது.

பாதுகாப்புத்துறை

* பாதுகாப்புத்துறையில் முதலீடு 11.1 சதவீதமாக உயர்த்தி 11,11,111 கோடி ரூபாயாக அதிகரிக்கப்படும். * பாதுகாப்புத்துறையில் முதலீடு மொத்த உள்நாட்டு வளர்ச்சியான ஜிடிபி.,யில் 3.4 சதவீதமாக இருக்கும்.

58 நிமிடங்கள்..

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 58 நிமிடங்களில் பட்ஜெட்டை வாசித்து முடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

g.s,rajan
பிப் 03, 2024 12:15

Super


Ramesh Sargam
பிப் 02, 2024 00:26

வீடுகளில் உள்ள மொட்டை மாடிகளில் சோலார் பேனல் அமைக்க மத்திய அரசே உதவிபுரியவேண்டும்.


Anantharaman Srinivasan
பிப் 01, 2024 22:56

Interim budget டை விமரிசனம் செய்வதில் அர்த்தமில்லை.


Anantharaman Srinivasan
பிப் 01, 2024 22:54

கடந்த நாலாண்டு பட்ஜெட் டில் அறிவித்து நிறைவேற்றாத திட்டங்களை/அறிவிப்புகளை மக்களுக்கு எடுத்துச்சொல்லப்போவது யார்..?? அது தேர்தல் நேரத்தில் வாக்களிக்க உதவும்.


Anantharaman Srinivasan
பிப் 01, 2024 22:45

நாடு முழுவதும் 41 ஆயிரம் ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் தரத்திற்கு உயர்த்தப்படும்.... அதாவது பழைய பெட்டிகளுக்கு வந்தேபாரத் போன்று பெயிண்ட் அடித்து பெயர் மாற்றம் செய்யப்பபடும். புதிய மொத்தையில் பழைய கள்ளு.


Anantharaman Srinivasan
பிப் 01, 2024 22:41

1 கோடி வீடுகளில் மொட்டை மாடியில் சோலார் அமைத்தால் மாதத்திற்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம். ஒரு கோடி வீடுகளில் அமைத்த பின் தான் இலவசம் அதுவரை..??


vbs manian
பிப் 01, 2024 20:28

இயற்கையில் கொட்டி கிடக்கும் செல்வம். அரசுக்கோ மக்களுக்கோ விழிப்புணர்வு இல்லை. எவ்வளவோ சாதிக்கலாம்.


Priyan Vadanad
பிப் 01, 2024 20:16

ஒரு கோடி வீடுகளில் உங்கள் வீடு உண்டா என்று பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவேளை, உங்கள் வீட்டில், உங்கள் செலவில், சூரியனிடமிருந்து நீங்கள் பெரும் மின்சாரத்துக்கு உங்களுக்கு ஏன் 300 யூனிட் மின்சாரம் இலவசம்? அரிசி விலைக்கு வாங்கி, உங்கள் வீட்டில், நீங்கள் சமைக்கும் சோறு உங்களுக்கு இலவசம் என்று சொன்னால் எப்படி?


செல்வம்
பிப் 02, 2024 00:34

வாடா வாடா வாடா தீ ம் கா எடுப்பு.. 200 ரூவா உ பி..


Priyan Vadanad
பிப் 01, 2024 20:11

ஒன்றும் பிரச்சினையில்லை. 300 யூனிட் மின்சாரத்துக்கான செலவை நமது வங்கிக்கணக்கில் போட்டுவிடுவார்கள். பிறகு குறைந்த பட்ச பண இருப்பு இல்லை என்று எடுத்துக்கொள்வார்கள். சோலி முடிஞ்சுது.


sahayadhas
பிப் 01, 2024 20:04

எந்த திட்டமும் தமிழ்நாட்டுக்கு வரவே வராது. 300 ஊனிட் வேண்டாம், Solar tem அமைத்து கொடுங்க பார்போம்.


Senthoora
பிப் 01, 2024 20:18

சோலார் அமித்துக்கொடுக்க அதானி நிறுவனத்துக்கு காண்ட்ராக்ட், இந்த அம்மையாருக்கு எவ்வளவு கமிஷன், அடுத்த ஊழல் ஆரம்பம். உசார்.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ