மேலும் செய்திகள்
மீட்கப்பட்ட குழந்தை தத்து மையத்தில் சேர்ப்பு
24-Nov-2024
புதுடில்லி:கடந்த ஜனவரி மாதம் முதல் காணாமல் போன, குழந்தைகள் மற்றும் சிறுமியர் உட்பட 311 பேர் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து, டில்லி மாநாகரப் போலீசின் ஷாஹ்தாரா துணை கமிஷனர் பிரசாந்த் கவுதம் கூறியதாவது:கடந்த ஜனவரி மாதம் முதல் டில்லியில் 118 சிறுமியர், 86 சிறுவர்கள் மற்றும் 107 பெரியவர்கள் உட்பட 311 பேர் காணாமல் போயினர். குடும்பத்தினர் அளித்த புகார்படி போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடினர்.இதற்காக, 'மிலாப்' என்ற தேடுதல் நடவடிக்கை துவக்கப்பட்டது. டில்லியில் 274 பேரும், உத்தர பிரதேசத்தில் 20 பேரும், பீஹாரில் 4 பேரும் மீட்கப்பட்டனர். .இதில், எட்டு ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன 14 வயது சிறுவன் உ.பி.,யின் லக்னோவில் கண்டுபிடிக்கப்பட்டான். மேலும், 2018ம் ஆண்டில் மாயமான 16 வயது சிறுமி தெலுங்கானா மாநிலத்தில் மீட்கப்பட்டாள். மீட்கப்பட்ட 311 பேரும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
24-Nov-2024