உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "ஆதர்ஷ் திட்ட "டிஸ்க் மாயம்: சி.பி.ஐ., மீது முதல்வர் புகார்

"ஆதர்ஷ் திட்ட "டிஸ்க் மாயம்: சி.பி.ஐ., மீது முதல்வர் புகார்

மும்பை: மகாராஷ்டிர சட்டசபையில், நவநிர்மாண் சேனா கட்சி எம்.எல்.ஏ., பாலா நந்த்கோன்கர் நேற்று பேசுகையில், 'ஆதர்ஷ் வீட்டு வசதி திட்டம் தொடர்பான, 'ஹார்டு டிஸ்க்'குகள் காணாமல் போனது குறித்து, சிறப்பு கோர்ட்டில், சி.பி.ஐ., சார்பில் தெரிவிக்கப்பட்டதா' என்றார். இதற்கு, மகாராஷ்டிர முதல்வர் பிரித்விராஜ் சவான், எழுத்துமூலம் அளித்த பதிலில், 'ஆதர்ஷ் திட்டம் தொடர்பான, 'டிஸ்க்'குகள் மாயமானது குறித்து, மாநில நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கு இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., தகவல் தெரிவிக்கவில்லை. இருந்தாலும், கடந்த மே மாதம், ஆதர்ஷ் திட்டம் தொடர்பான சில ஹார்டு டிஸ்க்குகளை, சி.பி.ஐ., கைப்பற்றியது,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை