உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் முடிவு விவகாரம்: தேர்தல் கமிஷன் விளக்கம்: ஏற்க ராகுல் மறுப்பு

தேர்தல் முடிவு விவகாரம்: தேர்தல் கமிஷன் விளக்கம்: ஏற்க ராகுல் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மஹாராஷ்டிரா தேர்தல் முடிவு தொடர்பாக ராகுல் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு தேர்தல் கமிஷன் விளக்கமளித்தது. ஆனால், இதனை ஏற்காத ராகுல், உண்மையை வெளியிட வேண்டும் எனக்கூறியுள்ளார். மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தொடர்பாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், பல குற்றச்சாட்டுகளை தெரிவித்து இருந்தார். தேர்தல் முடிவுகள் பிக்சிங் செய்யப்பட்டது என குற்றம்சாட்டியிருந்தார்.

அபத்தம்

இது தொடர்பாக தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் வேட்பாளர்கள் / கட்சிகளால் முறையாக நியமிக்கப்பட்ட ஓட்டுச்சாவடி முகவர்கள் முன்னிலையில் ஓட்டுப்பதிவு நடந்தது. காங்கிரஸ் வேட்பாளர்களோ அல்லது அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களோ தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் முன் அசாதாரண ஓட்டுப்பதிவு தொடர்பாகவும் எந்தவிதமான குற்றச்சாட்டுகளையும் எழுப்பவில்லை.மஹாராஷ்டிரா தேர்தலின் போது வாக்காளர் பட்டியலை இறுதி செய்யப்பட்டபோது 9,77,90,752 வாக்காளர்கள் இருந்தனர். ஆனால், 89 பேர் மட்டுமே முதலாவது மேல்முறையீட்டு ஆணையித்திடம் முறையிட்டனர். அதில் ஒருவர் மட்டுமே தேர்தல் கமிஷன் சிஇஓ .,விடம் முறையிட்டனர். 2024ல் சட்டசபை தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் அல்லது வேறு எந்த அரசியல் கட்சிகளிடமும் எந்த புகாரும் இல்லை .ஓட்டுச்சாவடி வாரியாக முகவர்களை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் நியமித்தன. மஹாராஷ்டிரா வாக்காளர் பட்டியலுக்கு எதிராக எழுப்பப்பட்ட இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சட்டத்தின் ஆட்சியை அவமதிப்பதுபோல் ஆகும். தேர்தல் ஆணையம், இந்த உண்மைகள் அனைத்தையும் கடந்த ஆண்டு 2024 டிச.,24 ல் காங்கிரசுக்கு அளித்த பதிலில் தெரிவித்து இருந்தது. இது தேர்தல் கமிஷன் இணையதளத்திலும் உள்ளது. இது போன்ற குற்றச்சாட்டுகளை மீண்டும் மீண்டும் எழுப்பப்படும் போது இந்த உண்மைகள் அனைத்தும் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாக தெரிகிறது. வாக்காளர்களின் சாதகமற்ற தீர்ப்புக்கு பிறகு, தேர்தல் கமிஷன் சமரசம் செய்யப்பட்டு உள்ளது என்று கூறி அதனை அவதூறு செய்ய முயற்சி செய்வது முற்றிலும் அபத்தம். இவ்வாறு அந்த அறிக்கையில் தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது.

வெளியிட வேண்டும்

இதனைத் தொடர்ந்து ராகுல் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: தேர்தல் ஆணையம் ஒரு அரசியல்சாசன அமைப்பு. கையெழுத்திடாத, தவிர்க்கும் குறிப்புகளை இடைத்தரகர்களுக்கு வெளியிடுவது என்பது தீவிரமான கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கான வழி அல்ல.உங்களிடம் மறைக்க எதுவும் இல்லையென்றால், எனது கேள்விகளுக்கு பதிலளித்து நிரூபிக்கவும்.மஹாராஷ்டிரா உட்பட அனைத்து மாநிலங்களின் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலுக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்மஹாராஷ்டிரா ஓட்டுச்சாவடிகளில் மாலை 5 மணிக்கு பிறகு அனைத்து சிசிடிவி காட்சிகளையும் வெளியிட வேண்டும்.இதனை தவிர்ப்பது உங்கள் நம்பகத்தன்மையை பாதுகாக்காது. உண்மையை சொல்ல வேண்டும். இவ்வாறு அந்த பதிவில் ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 08, 2025 09:06

கருத்து சொன்னது ராகுல் என்ற ஒரு காரணத்துக்காகவே பலர் எதிர்மறையான கருத்து பதிவிடுகிறா ர்கள். 1980 அண்ணா நகர் சட்ட மன்ற தேர்தல், சிவகங்கை பாராளுமன்ற தேர்தல், மாணிக் தாக்குர் வைகோ மோதிய விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் 2024 கோவை தொகுதி பாராளுமன்ற தேர்தல் போன்ற இன்னும் பல, நமது தேர்தல் ஆணையத்தின் நேர்மைக்கு சாட்சி


ராமகிருஷ்ணன்
ஜூன் 08, 2025 04:59

இந்திய தேர்தல் கமிஷன் சொல்லும் விளக்கம் பப்புக்கு புரியாது. பாக்கிஸ்தான் சொல்லும் விளக்கங்கள் தான் அவருக்கு புரியும், இனிக்கும். ஏனெனில் இப்போது உள்ளது அல்குவைதா காங்கிரஸ். அதனால இப்படித்தான் பேசுவார். இவர் முழு குடும்பத்தோடு இத்தாலிக்கு போயிட்டால் பழையபடி காங்கிரஸ் மாற வாய்ப்புள்ளது. நேரு காலத்தில் இருந்து அல்குவைதா காங்கிரஸ் இந்தியாவில் இயங்கி வருகிறது. அந்த விஷத்தை முறிக்க பி ஜே பி பாடுபட்டு வருகிறது.


S A
ஜூன் 08, 2025 00:26

ஏதாவது உண்மை இருந்திருந்தால் நீதிமன்றத்தை அணுகி இருப்பார்கள். எத்தனை முறை வக்பு சட்டத்தையும் ரபேலையும்்நீதிமன்றத்துக்கு கொண்டுசென்றனர். கட்சிகாரனை ஆறுதல் படுத்த தான் இதை ச


S A
ஜூன் 08, 2025 00:26

ஏதாவது உண்மை இருந்திருந்தால் நீதிமன்றத்தை அணுகி இருப்பார்கள். எத்தனை முறை வக்பு சட்டத்தையும் ரபேலையும்்நீதிமன்றத்துக்கு கொண்டுசென்றனர். கட்சிகாரனை ஆறுதல் படுத்த தான் இதை சொல்கிறார் பப்புஜி. என்றைக்கு பக்குவமாக பேசிஇருக்கிறார் பப்பு அவர்கள், அதனால் இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.


Bhakt
ஜூன் 07, 2025 23:15

இந்த வெளி நாட்டு லோடு ஏத்துக்கிட்டா என்ன ஏத்துக்கலைன்னா என்ன? போவீங்களா.


V.Mohan
ஜூன் 07, 2025 22:58

பள்ளிப்படிப்பு முடிக்காத தத்தி திரும்ப திரும்ப அறிவிலித்தனமாக ஆதாரம் இல்லாது கேள்வி கேட்டு பிடிவாதமாக தன் நினைப்பை மட்டும் பேசுவது , செவத்துக் கோழி கத்திக்கொண்டே இருப்பதை நினைவு படுத்துகிறது.


Anand
ஜூன் 07, 2025 22:31

இவர் சொல்வதை யாரும் கேட்க மாட்டார்கள்


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஜூன் 07, 2025 22:23

பாஸ் நாம அமேதில ஜெயிச்சது பிக்சிங் னு எல்லோருக்கும் தெரியும். டெபாசிட் வாங்க கூட முடியாதுன்னு எல்லோருக்கும் தெரியும். நீங்க எல்லாத்தையும் விலைக்கு வாங்கி ஜெயிச்சீங்கன்னு ஊர்ல பேச்சு..


Ganapathy
ஜூன் 08, 2025 00:19

சூப்பர்


GMM
ஜூன் 07, 2025 22:23

சாப்பிட்ட சோறுக்கு ஊறுகாய் தேடி பயன்? மஹாராஷ்டிரா உட்பட அனைத்து மாநிலங்களின் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலை ரத்து செய்யலாமா? கட்சிகளின் ஒப்புதல் பெற்று தர முடியுமா ராகுல். டிஜிட்டல் மயம் வந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன. ஒருங்கிணைந்த டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை இனி வெளியிட வேண்டும் என்று கூறும் ராகுல். ராகுல் காங்கிரஸ் மக்கள் ஆதரவை இழந்து வருகிறது. இனி எழுவது கடினம்.


சகுரா
ஜூன் 07, 2025 21:36

குற்றம் சாட்டுபவரும் சாட்சிகளை சமர்ப்பித்து நீதிமன்றத்தை நாடலாமே?


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 07, 2025 22:57

இன்னமும் இந்திய நீதிமன்றங்களை நீங்கள் நம்புகிறீர்களா ?