உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வக்ப் சட்டத்திற்கு தடை விதிக்கக்கூடாது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு

வக்ப் சட்டத்திற்கு தடை விதிக்கக்கூடாது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' வக்ப் திருத்தச் சட்டத்திற்கு தடை விதிக்கக்கூடாது,'' என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட வக்ப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த மத்திய அரசுக்கு கேள்விகளை எழுப்பி இருந்தது.இந்நிலையில் இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியுள்ளதாவது: பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு தடை விதிப்பது என்பது அதிகார சமநிலை கொள்கைக்கு எதிரானது. பார்லிமென்ட் கூட்டுக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், பார்லிமென்டின் இரண்டு அவைகளிலும், மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. சட்டத்தின் அரசியலமைப்பு உறுதித்தன்மையை ஆராயும் அதிகாரம் சந்தேகத்திற்கு இடமின்றி உச்சநீதிமன்றத்திற்கு உள்ளது. அதேநேரத்தில் இந்த இடைக்கால கட்டத்தில் எந்தவொரு விதியையும் செயல்படுத்துவதற்கு எதிராக ஒரு தடை உத்தரவை பிறப்பிப்பது என்பது அதிகார சமநிலையை மீறுவதாக அமைந்துவிடும். இவ்வாறு அந்த மனுவில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

venugopal s
ஏப் 26, 2025 12:18

சட்டம் இயற்ற மட்டுமே பாராளுமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. அது சட்டபூர்வமானதா இல்லையா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு!


தமிழ்வேள்
ஏப் 26, 2025 07:55

கொலீஜியம் என்பதற்கு அரசியல் சட்ட ஏற்பு இல்லை.அனுஷ்டானத்தில் மட்டுமே உள்ள இதை பிடித்துக்கொண்டு தான் உச்ச மன்றம் ஏகப்பட்ட டான்ஸ் ஆடுகிறது..எனவே இதை தடை செய்தால் மட்டுமே பாரதம் பிரச்சினை இன்றி தேச நலனுக்கான நடவடிக்கைகள் எடுக்க முடியும்.. காங்கிரஸ் அடிமை உச்ச மன்றம், நாளை பாக்.பயங்கரவாதிகளை சுட்டது தவறு என்று கூட சொல்லும்..ராணுவத்திலும் மூக்கை நீட்டும்.


மதிவதனன்
ஏப் 26, 2025 00:35

இதனால் பாதிப்பு யாருக்கும் இல்லை , இதை செய்ய மாட்டோம் அதா செய்ய மாட்டோம் அப்புறம் எதற்கு சட்டம் கொண்டு வரணும் , அப்போ சங்கர மட அடுத்த பீட தி பதி ஒரு முஸ்லீம் நியமிக்கலாமா


தத்வமசி
ஏப் 25, 2025 23:14

நீதிமன்றத்திற்கு நாட்டை ஆள வேண்டும் என்கிற எண்ணம் வந்தால் அது நாட்டை எங்கே கொண்டு செல்லும் ? பிறகு நாடாளுமன்றம், ஜனாதிபதி, பிரதமர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், நாடாளுமன்றம், அவர்களால் இயற்றப்படும் சட்டங்கள் என்று அனைத்து சட்ட சுதந்திரமும் வீண். எல்லாவற்றையும் நீதிமன்றமே கையில் எடுத்துக் கொண்டால் இவற்றில் செய்யப்படும் வரிப்பணம் தேவை இல்லாதது. அவற்றின் செயல்களில் உள்ள சட்ட அங்கீகாரம் எல்லாம் வீண். நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை கவனித்தாலே போதுமானது. அரசு நீதிமன்றத்தின் சுதந்திரத்தில் தலையிட்டால் அதை நீதிபதிகள் ஒப்புக் கொள்வார்களா ? கொலிஜியம் ஒழிக்கப்பட வேண்டும்.


Iniyan
ஏப் 25, 2025 22:52

நீதி மன்றங்கள் பாராளுமன்றம் இயற்றும் சட்டல்களின் படி நடக்கன் வேண்டும். அவர்கள் தனியாக ஒரு மாபியா அரசாங்கம் நடத்த விட கூடாது மீறினால் நீதிபதிகளை அரசு செய்து தேச விரோத சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்க வேண்டும்


Kumar Kumzi
ஏப் 25, 2025 22:49

அரசாங்கம் நாட்டின் நன்மை இயக்கும் சட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவதை தடை செய்ய வேண்டும்


GMM
ஏப் 25, 2025 22:09

வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக நிழல் வழக்கு என்று கூறலாம். தற்போதய நிலையில் மன்றம் விசாரிக்க தடை விதிக்க முடியாது. சட்டத்தின் அரசியலமைப்பு உறுதித்தன்மையை ஆராயும் அதிகாரம் இருக்கட்டும். கட்டிய கட்டடம் கொண்டு உறுதி தன்மை அறியலாம். கட்டட வரைபடம் கொண்டு எப்படி உறுதி தன்மை அறிய முடியும்? அரசை , மன்றத்தை வக்கீல்கள் குழப்புகின்றனர். அதிகார சமநிலை ஒரு குழப்பமான வாதம்.


Sundar R
ஏப் 25, 2025 20:02

HYPOCRISY OF THE SUPREME COURT SC is ordering the Honorable President to clear the files received from Tamil Nadu Stalin Assembly through Honourable Governor Shri R N Ravi within 3 months. a. But, for all the Bills and Amendments of the Central Government even after they are successfully passed by both the Houses of the Parliament, Supreme Court stands as a Hindrance and are blocking those Bills and Amendments. b a & b are completely contrary to each other. Is it not எ Hypocrisy? Supreme Court is the main reason for the impediment and retardation of so many Bills and Amendments received from the Parliament. They have to quantify the number of such halted Bills and Amendments. Because of the Supreme Court, 1.4 Billions of our citizens, out of this many poor people were deprived of getting their legitimate benefits from the Central Government.


GMM
ஏப் 25, 2025 19:56

புதிய சட்டத்தின் அரசியலமைப்பு உறுதித்தன்மையை ஆராயும் அதிகாரம் சந்தேகத்திற்கு இடமின்றி உச்சமன்றத்திற்கு உள்ளது என்றால், 1954-ஆம் ஆண்டில் புதிய வக்ஃபு சட்டம் உச்ச மன்ற உறுதி தன்மை ஆராயாமல் எப்படி நீக்கப்பட்டது. மீண்டும் மிக புதிய 1995- ஆண்டு வக்ஃபு சட்டம் இயற்றப்பட்டதின் உறுதி தன்மையை மன்றம் ஆராயவில்லை. ஏன்? 2025 ல் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட சட்ட திருத்த தடை விதிப்பது என்பது அதிகார சமநிலை கொள்கையா ? சட்டம் அமுல் படுத்தி, அதன் விதியின் பாதிப்பை ஆதாரத்துடன் குடிமகன் மனு செய்தால், உச்ச மன்றம் மாற்ற பரிந்துரை செய்ய முடியும். சட்டத்தை தடுக்க முடியும் என்றால் அனைத்து சட்டமும் நீதிமன்றம் வழியாக கவர்னர், ஜனாதிபதிக்கு செல்ல வேண்டும்..ஜனாதிபதி ஒப்புதல் வழங்கிய பின், சட்டம் முதன் நிலை அடையும். மன்னர், தளபதிக்கு சம அதிகாரம் இருக்காது..


தாமரை மலர்கிறது
ஏப் 25, 2025 19:50

பாராளுமன்றத்தில் மூக்கை நுழைக்க கூடாது.


மதிவதனன்
ஏப் 26, 2025 00:32

ஆனா ரெவி சட்டசபைக்குள் மூக்கை நுழைக்கலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை