உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜனநாயகத்தை துஷ்பிரயோகம் செய்வதா? ராகுலை மக்கள் நம்பமாட்டார்கள் என்கிறார் கிரண் ரிஜிஜூ

ஜனநாயகத்தை துஷ்பிரயோகம் செய்வதா? ராகுலை மக்கள் நம்பமாட்டார்கள் என்கிறார் கிரண் ரிஜிஜூ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவின் ஜனநாயகத்தை ராகுல் துஷ்பிரயோகம் செய்கிறார். அவரை நாட்டு மக்கள் நம்பமாட்டார்கள் என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nv9m02ey&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டில்லியில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது: பாகிஸ்தான் உருவாக்கும் போலி கதையை ராகுல் முன் வைத்தார். பாகிஸ்தான் என்ன போலி கதைகளை உருவாக்கினாலும், அதே கதையைத்தான் ராகுலும், அவரது கூட்டாளியும் இந்தியாவில் பேசி வருகின்றனர். எனவே, கடந்த சில ஆண்டுகளில், ராகுலும், அவரது குழுவும் இந்தியாவில் எதைப் பற்றிப் பேசினாலும், ஒரு கதையை உருவாக்க முயற்சித்தாலும், அதையே இந்திய எதிர்ப்புக் குழுக்களும் பாகிஸ்தானில் பேசுகின்றன என்பதைக் கண்டறிந்துள்ளோம். பாகிஸ்தானுக்கு ராகுலுக்கு இடையே பல ஆண்டுகளாக பல்வேறு விஷயங்களை ஒற்றுமையை நாங்கள் கண்டறிந்தோம். இந்தியாவின் ஜனநாயகத்தை ராகுல் துஷ்பிரயோகம் செய்கிறார். அவரை நாட்டு மக்கள் நம்பமாட்டார்கள். ராகுல் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க விரும்புகிறார்.ஏழைகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பிரதமர் மோடியை தங்கள் தலைவராகக் கருதுகின்றனர்.தேர்தல்களில் தோல்வியடைந்த பிறகு, ராகுல் தனது பலவீனங்களை மறைக்க பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிக்கொண்டே இருந்தால், அதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாடு மாறிவிட்டது, பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா முன்னேறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

எத்தனை பொய்?

அதேபோல், ராகுலுக்கு குறித்து பாட்னாவில் பாஜ எம்பி ரவி சங்கர் பிரசாத் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். அவர் கூறியதாவது: ராகுலுக்கு என்ன பிரச்சனை? அவர் எத்தனை பொய்களைச் சொல்வார்? அவர் எவ்வளவு உண்மையான விஷயங்களை பொய்யாக திரித்து பேசுவார். அவரை நாங்கள் கடுமையாக விமர்சித்து பேசலாம். ஆனால் அது எங்கள் கலாசாரமும் அல்ல. பாஜ கட்சியின் கலாசாரமும் அல்ல. கர்நாடகாவில் 2023ம் ஆண்டு முதல் யாருடைய அரசாங்கம் உள்ளது? காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. ஆனால் அவர் பாஜ தேர்தலில் முறைகேடு செய்ததாக கூறுகிறார். அவர் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சொல்லி உண்மைகளைத் திரிக்கிறார். அது ராகுலின் இயல்பாகிவிட்டது. ராகுல் எதிர்க்கட்சித் தலைவர் பதவியின் கண்ணியத்தைக் குறைத்துவிட்டார். இவ்வாறு ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

வாய்மையே வெல்லும்
செப் 19, 2025 19:41

ஜனகராஜ் பாண்டியராஜன் திரைப்படம்.. வேணு... திருவாணிய திருப்பி கொடுத்திடு கண்ணு ..என்கிற வசனம் . பிரசித்தம்.. அதே மாதிரி.. இங்க வேணு உருட்டுற உருட்டு வீணாப்போன ராவுளுக்காக .. திருடிய திருவாணிக்கு சமம்..


Rathna
செப் 19, 2025 18:15

இங்கே விட பாகிஸ்தானில் ஆதரவு அதிகம் போல உள்ளது. அதை பாக்கிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி. இவரது காஷ்மீர் பயணத்தின் போது பல தீவிரவாதிகள் வந்து இவரிடம் பேசியதாக அவரே சொல்லி உள்ளார். மோடி அரசு தீவிரவாதிகளை மிகவும் கடுமையாக நடத்துவதாக இவரிடம் புகார் கூறியதாக இவரே சொன்னார்.


Venugopal S
செப் 19, 2025 17:45

இப்போது நமது நாட்டு மக்களுக்கு உள்ள ஒரே நம்பிக்கை ராகுல் காந்தி தான், நீங்கள் நாட்டை ஆளும் லட்சணம் அப்படி!


sankar
செப் 19, 2025 17:56

தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை எடுத்து இந்த புளுகுணியை ஜெயிலில் அடைக்க வேண்டும் - சட்டம் காப்பாற்றப்படவேண்டும்


வாய்மையே வெல்லும்
செப் 19, 2025 19:32

யாரு.. புளுகுமூட்டை ..ராவுளுக்கு பாய்மார்கள் ஹிந்துக்கள் வேடமிட்டு தான் மத்தளம் வாசிப்பார்கள் .


KOVAIKARAN
செப் 19, 2025 22:03

திரு வேணுகோபால் அவர்கள் கூறியது தான் இந்த நூற்றாண்டின் மிகவும் சிறந்த ஜோக். அதற்காக அவருக்கு பாகிஸ்தான் போய் அங்கேயே இருக்க ஒரு பயண ஏற்பாடு செய்யலாம்.


கணேஷ் எஸ்
செப் 20, 2025 04:30

ராகுல் ஓரு நவீன அரிச்சந்திரன். மக்கள் தான் விஸ்வமித்திரர்கள். அவர்கள் ராகுலிடம் எப்படியாவது ஒரே ஒரு உண்மையை சொல்லி விடுங்கள் அவர் குடும்ப சொத்தான அரியணையில் அமர்ந்து விடலாம் என்கிறார்கள். ஆனால் ராகுல்தான் மசிவாதக இல்லை?


KOVAIKARAN
செப் 19, 2025 17:12

இவரின் சிந்தனையெல்லாம், நம் நாட்டின் இறையாண்மைக்கும், நலனுக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் செய்யும் விதமாக பேசி வருவதால், இந்த ராகுல் பப்புவின் மீது தேச துரோக வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க நமது பலவகையான சட்டங்களில் ஏதேனும் வழி இருக்கிறதா என்று ஆராந்து யாராவது நடவடிக்கை எடுத்தால் நல்லது.


Ganesun Iyer
செப் 19, 2025 16:43

எனக்கு என்னவோ, ராவுல் வின்சி மோடியோட ஸ்லீப்பேர் செல்லாக இருப்போரோ? டௌட்.....


Ganesun Iyer
செப் 19, 2025 16:37

அது சரி, அடுத்த முறை காட்பாடி தொகுதியில் நிறுத்தி ஜெயிக்க வைக்கவும்..


cpv s
செப் 19, 2025 16:26

he is semi mental man, because of india freedom he will speaking flase statement, he can not politic in pakistan, italy,


என்றும் இந்தியன்
செப் 19, 2025 16:20

ராகுல் இல்லையென்றால் பிஜேபி இந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கவே முடியாது, அந்த அளவுக்கு அவர் பிஜேபியின் புகழை பரப்பிக்கொண்டேயிருக்கின்றார். அதாவது ஒரு கருப்பு பன்றியையும் கருப்பு கன்றுக்குட்டியையும் ஒரே நேரத்தில் பார்த்தால் உங்கள் எண்ணம் என்னாவாகக் இருக்கும் கருப்பு கன்றுக்குட்டி என்ன அழகாக இருக்கின்றது என்று சொல்வீர்கள் அல்லவா அதை போலத்தான். நிஜமாகவே இந்தியநாட்டுக்காக பாடுபடும் கட்சியாக மாறிவிட்டது பிஜேபி என்று எல்லோரும் புகழ இந்த ராகுலின் அந்நிய நாட்டு நாடகம் தான் முக்கிய உதாரணம்


Anand
செப் 19, 2025 15:48

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் எல்லாம் எல்லைக்கு அப்பால்தானா? உள்ளுக்குள் இருக்கும் அந்நிய கைக்கூலிகள் மீது செய்தால் மிகவும் நல்லது.


M S RAGHUNATHAN
செப் 19, 2025 15:28

1975 இல் எதிர் கட்சியே இல்லாத பாராளுமன்றத்தில் 39 வது சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்து ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகியது இந்திரா. 1984 இல் காங்கிரஸ் பாராளுமன்ற கட்சியின் தீர்மானம் இல்லாமல் நேரடியாக ராஜீவ் பிரதமர் ஆக பதவி ஏற்றார். இது ஜனநாயகமா ? ராகுலும், காங்கிரஸ் தலைவர்களும் பதில் சொன்னால் பரவாயில்லை .


சமீபத்திய செய்தி