உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "விதியில் இருந்து யாரும் தப்ப முடியாது": ஹாத்ரஸ் சம்பவம் குறித்து போலே பாபா கருத்து

"விதியில் இருந்து யாரும் தப்ப முடியாது": ஹாத்ரஸ் சம்பவம் குறித்து போலே பாபா கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: 'மரணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. விதியில் இருந்து யாரும் தப்ப முடியாது' என ஹாத்ரஸில் கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலே பாபா கருத்து தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 2ம் தேதி, உத்தர பிரதேசத்தில், ஹாத்ரஸ் மாவட்டத்தின் சிகந்த்ரா ராவ் பகுதியில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில் போலே பாபா என்பவரின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 121 பேர் உயிரிழந்தனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தேவப்பிரகாஷ் மதுகர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை அறிக்கையில் போலே பாபா பெயர் இடம்பெறவில்லை.

தப்ப முடியாது

இந்நிலையில், காஸ்கஞ்ச் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், போலே பாபா பேசியதாவது: ஹாத்ரஸில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 121 பேர் உயிரிழந்த சம்பவத்தால் மிகவும் கவலை அடைந்துள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உடன் நாங்கள் துணை நிற்கிறோம். மரணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. விதியில் இருந்து யாரும் தப்ப முடியாது.

விசாரணை கமிஷன்

அனைவரும் ஒரு நாள் இறக்க நேரிடும். நிகழ்ச்சி நடந்த போது 15க்கும் மேற்பட்டோர் நச்சு வாயுவை கூட்டத்தில் தெளித்துவிட்டு காரில் தப்பிச் சென்றனர் என எங்கள் வழக்கறிஞர் கூறியது முற்றிலும் உண்மை. அவர் கூறியது போல் சதி நடந்துள்ளது. எனது மீது சிலர் அவதூறு செய்ய முயற்சிக்கின்றனர். விசாரணை கமிஷன் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. உண்மை வெளிவரும் மற்றும் சதி அம்பலப்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Godyes
ஜூலை 19, 2024 19:42

எல்லாரும் சாகும் போது இவன் மட்டும் எப்படி தப்பித்தான்.சாமியாரா இவன்.அதுவும் விதி தான்.


Godyes
ஜூலை 19, 2024 19:37

இந்த பயல் சாமியார் மாதிரியா இருக்கான்.நிறைய பேர் சாக காரணமான இவன் பழியை விதி மேல் போடுகிறான்.


Nandakumar Naidu.
ஜூலை 19, 2024 00:52

இவனை ஏன் இன்னும் உள்ளே போடவில்லை? இவன் தேச,சமூக மற்றும் ஹிந்து விரோத அக்கிலேஷின் கைக்கூலி ஆச்செ?


D.Ambujavalli
ஜூலை 18, 2024 16:47

செத்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் அழகு இதுதானா?


Senthoora
ஜூலை 18, 2024 15:20

இவர் என்ன சொல்லவருகிறார், அந்த அப்பாவி பக்த்தர்கள். மிதிபட்டு துடிதுடித்து செத்ததை, அவர்களின் விதி என்கிறார், நல்லவேளை இவரின்குடும்பத்தார் இதில் விதியால் இறக்கவில்லை, ஆனால் கர்மா பார்த்துக்கொண்டு இருக்கு. நல்ல நேரம் வர.


Balasubramanian
ஜூலை 18, 2024 14:20

அட பரவாயில்லையே! தமிழகம் உங்களுக்காக காத்திருக்கிறது! - நீட் தேர்வில் சாவது விதி, கள்ள சாராயம் குடித்து இறப்பது விதி - என்று சொல்லி பாருங்கள்


முருகன்
ஜூலை 18, 2024 14:13

இவரின் பேச்சு ஆணவத்தின் உச்சம் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்


LION Bala
ஜூலை 18, 2024 14:06

சொற்பொழிவு நடக்கும் இடத்தில் 15 பேர்கள் விஷ வாயுவை செலுத்தினார்கள் என்று வாய் கூசாமல் சொல்கிறாரே? அப்படியென்றால் வாயில்களில் காவலர்கள் யாருமே இல்லையா, கூட்டத்திற்கு வந்தவர்கள் ஒருவர் மீதும் சந்தேகம் வரவில்லையா? காஸ்டிலியான மேக்கப் போட்டிருக்கும் போலி சாமியார் மாதிரி தெரியுது. 121 உயிர்கள் இவனது கூட்டத்தில் பலியாகி உள்ளனர் - இறந்தவர்களுக்கு வருத்தம் தெரிவிக்காமல் விதியின் மேல் பழிபோடுகிறார்கள்... ஏழைகளின் உயிரென்றால் அவ்வளவு மதிப்பில்லாமல் போகுமா? சாமியார்களை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள விழிப்புணர்வு வேண்டும்.....


Senthoora
ஜூலை 18, 2024 15:29

முடித்தாள், இவர் வசம் உள்ள சொத்துக்களை இறந்தவர்கள் குடும்பத்துக்கு எழுதி தருவாரா? அப்படி எழுதினால் உண்மை சாமியார்,


Yaro Oruvan
ஜூலை 18, 2024 13:48

தப்பிச்சுட்டியே


Apposthalan samlin
ஜூலை 18, 2024 13:10

பாமர மக்களை சொல்ல வேண்டும் இந்த சாமியார் வெள்ளையும் சொள்ளையுமா எப்படி இருக்கிறார் ஏன் இந்த சாமியாருக்கு ...


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி