வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ரெண்டு கோடி வேலை கணக்கு. ஆமா...
புதுடில்லி: ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட பெரும்பாலான இந்தியர்கள் மீட்கப்பட்டு விட்டனர். இன்னும் 19 பேர் மட்டும் அங்கு பணியாற்றி வருகின்றனர் என லோக்சபாவில் மத்திய அரசு கூறியுள்ளது.உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதில், அந்நாட்டைச் சேர்ந்த லட்சக்கணக்கான வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இச்சூழ்நிலையில், வெளிநாட்டில் வேலை, அதிக சம்பளம் என ஆசை வார்த்தை எனக்கூறி இந்தியர்கள் மோசடி செய்து ரஷ்யா அழைத்துச் சென்று ராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு போர்க்களத்தில் பணி வழங்கப்பட்டது. இது குறித்த தகவல் வெளியானதும், அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது. ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இந்தியர்களை விடுவிக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் புடினிடம், பிரதமர் மோடி தொலைபேசியிலும், நேரிலும் வலியுறுத்தி இருந்தார். இதன்படி இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.இநநிலையில், ரஷ்யா ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இந்தியர்கள் எத்தனை பேர் மற்றும் மீட்கப்பட்ட இந்தியர்கள் எத்தனை பேர் என்பது குறித்த லோக்சபாவில் மத்திய அரசிடம் கேள்வி கேட்கப்பட்டது.இதற்கு, மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் : மத்திய அரசின் முயற்சியால், ரஷ்ய ராணுவத்தில் இருந்து பெரும்பாலான இந்தியர்கள் மீட்கப்பட்டு விட்டனர். அவர்களில் பலர் தாயகம் திரும்பி உள்ளனர்.தற்போது வரை கிடைத்த தகவல்களின்படி இன்னும் 19 பேர் மட்டுமே ரஷ்யா ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் எங்கு உள்ளனர்.என்ன பணி செய்கின்றனர் என ரஷ்யாவிடம் கேள்வி எழுப்பி உள்ளோம். அவர்களின் நலனை உறுதி செய்வதுடன், விரைவில் அனுப்பி வைக்க வேண்டும் என கூறியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
ரெண்டு கோடி வேலை கணக்கு. ஆமா...