உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆடைகளை களைந்து ஊர்வலம் போகச் செய்வேன்: தெலுங்கானா முதல்வர் சர்ச்சை கருத்து

ஆடைகளை களைந்து ஊர்வலம் போகச் செய்வேன்: தெலுங்கானா முதல்வர் சர்ச்சை கருத்து

ஹைதராபாத்: 'பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் பொது ஊழியர்களைப் பற்றி அவதூறான, ஆட்சேபத்துக்குரிய கருத்து பதிவிடுவோர், பொது இடங்களில் ஆடைகளை களைந்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவர்' என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த ரெட்டி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குறித்து அவதூறு பரப்பிய செய்தி தொலைக்காட்சியை சேர்ந்த பெண் பத்திரிகையாளர்கள் இருவரை ஹைதராபாத் சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தெலுங்கானா கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும், தீர்மானத்தின் மீது சட்டபையில் விவாதம் நடந்தது. அப்போது தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது:சமீபத்தில் எனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் என்னைப் பற்றி இழிவான மற்றும் தவறான வார்த்தைகளைப் பதிவிட்ட இரண்டு பெண் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டதை அவர்கள் (பி.ஆர்.எஸ்) கண்டித்தனர். தவறான கருத்துகளை பதிவிட்டதற்கு அவர்கள் தான் காரணம். நான் பொறுமையாக இருந்தேன்.ஆனால் எனது குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு எதிராக சமூக ஊடகப் பதிவுகளில் மோசமான வார்த்தைகள் பயன்படுத்தப்படும்போது நான் எவ்வளவு காலம் சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும்? எனது குடும்பப் பெண் உறுப்பினர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் வார்த்தைகளால் ரத்தம் கொதிக்கிறது. பி.ஆர்.எஸ்., தலைவர்கள் தங்கள் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மனைவிகளை அவமதிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தினால் அமைதியாக இருப்பார்களா? பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் பொது ஊழியர்களைப் பற்றி அவதூறான, ஆட்சேபத்துக்குரிய கருத்து பதிவிடுவோர், பொது இடங்களில் ஆடைகளைக் களைந்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவர்.எங்களை மனரீதியாக காயப்படுத்துவதன் மூலம் அரசியல் ஆதாயம் பெறலாம் என்ற எண்ணத்தில் எதிர்க்கட்சியினர் இருக்காதீர்கள். நீங்கள் எல்லை மீறினால், விளைவுகள் மோசமாக இருக்கும். நான் சகிப்புத்தன்மையுடன் இருக்கிறேன், இளைஞர்களைத் தடுக்கிறேன், இல்லையெனில் அவர்கள் சாலைகளில் இறங்கி, உங்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

raja
மார் 16, 2025 19:39

இங்கே உன் கூட்டாளி திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொனல்லை அவனின் அடிமை ஊடகங்கல் ருவா இறநூறு கொத்தடிமை கூட இப்படித்தான் செய்ரானுவோ... கூட்டணியா முறிக்க சொல்லேன் உன் இத்தால் எஜமானர்களிடம்...எதை போட்டோமோ அது தானே விளையும்...


M Ramachandran
மார் 16, 2025 19:35

தீய மு க்கா ஆபாச பேச்சாளர் பாரதியை நினைவு படுத்துகிறார்.


Anantharaman Srinivasan
மார் 16, 2025 18:02

சட்டப்படி நடவடிக்கையெடுப்பேன் என்று சொன்னால் அது நியாயம். முதல்வர் பேச்சு பதவிப்பிராமாணத்தை மீறியது.


Anantharaman Srinivasan
மார் 16, 2025 18:02

கேடுகெட்ட முதல்வர். ஆடைகளை களைந்து ஊர்வலம் போகச்செய்வாராம். சட்டப்படி நடவடிக்கையெடுப்பேன் என்று சொன்னால் அது நியாயம். முதல்வர் பேச்சு பதவிப்பிராமாணத்தை மீறியது.


Sampath Kumar
மார் 16, 2025 16:45

THIS IS GULITY STYLE HE IS THE MAN ????


V.Mohan
மார் 16, 2025 15:27

சூப்பர் முதல்வர் ரேவந்த் அவர்கள்அதைவிட சூப்பர் முதல்வர் சுடாலின் அவர்கள் வரியை தர மாட்டோம்னு சொல்ல ஒரு நொடி போதும் என்றார் .ஐயா, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தாமாக முன் வந்து இது மாதிரி பேச்சுக்களுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டாமா ? ஆக்ஷன் எடுத்து இவர்களுக்கு அஸ்தியில் ஜூரம் வரவேண்டாமா ??


Bhakt
மார் 16, 2025 15:18

சூப்பர்


Srinivasan Krishnamoorthi
மார் 16, 2025 15:13

ஆக காங்கிரஸ் புத்தி வெளி வருது


m.arunachalam
மார் 16, 2025 15:05

பிரபலமடைவதற்க்காக எதை வேண்டுமானாலும் வெளியிடலாமா ? அப்படி அவர் பேச காரணம் என்ன ? ஊடகங்கள் நீதித்துறைக்கு செல்லலாமே . இங்கும் மக்கள் சக்தியை வீணடிப்பதில் ஊடகங்கள்தான் பெரும் பங்கு வகிக்கின்றன என்பது தான் உண்மை.


naranam
மார் 16, 2025 14:57

ஆணவத்தின் உச்சக்கட்ட பிரதிபலிப்பு இவன் பேச்சு.


புதிய வீடியோ