உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இமயமலைக்குச் செல்வேன்: ஓய்வுக்குப் பிந்தைய ப்ளான் இதுதான் என்கிறார் தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார்!

இமயமலைக்குச் செல்வேன்: ஓய்வுக்குப் பிந்தைய ப்ளான் இதுதான் என்கிறார் தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அடுத்த மாதம் ஓய்வு பெற்ற பிறகு, இமயமலையில் பல மாதங்கள் தனிமையில் கழிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை தலைமைத் தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் தெரிவித்தார்.ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ராஜிவ் குமார் இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக இருந்து வருகிறார். இவர் கடந்த 2022ம் ஆண்டு தேர்தல் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார். இவரது பதவிக்காலம் வரும் பிப்ரவரி 18ம் தேதி முடிவடைகிறது. அவர் நேற்று, தனது கடைசி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார். அவர், டில்லிக்கு பிப்ரவரி 5ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கும் என்று அறிவித்துள்ளார்.இந்நிலையில், அவர் ஓய்வுக்கு பிறகு என்ன திட்டம் இருக்கிறது என நிருபர்கள் சந்திப்பில், ராஜிவ் குமார் கூறியதாவது: அடுத்த மாதம் ஓய்வு பெற்ற பிறகு, இமயமலையில் பல மாதங்கள் தனிமையில் கழிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அடுத்த 5 மாதங்களுக்கு நான் தனிமையில் இருப்பேன். எனக்கு தனிமை மற்றும் சுய படிப்பு தேவைப்படுகிறது. ஆறாம் வகுப்பில் ஏ.பி.சி.டி., கற்க ஆரம்பித்தேன். ஸ்லேட் சுமந்து மரத்தடியில் அமர்ந்து படித்தேன். அந்த இடத்திற்கு மீண்டும் சென்று, குழந்தைகளுக்கு கற்பிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

baala
ஜன 08, 2025 15:50

ஆண்டவனின் கூலி நிச்சயம்.


Narayanan Muthu
ஜன 08, 2025 13:25

செய்த பாவத்திற்கு இமயமலை அல்ல வேறு எங்கு சென்றாலும் விமோசனம் கிடைக்காது. குற்ற உணர்ச்சியில் நிம்மதியிழந்து நரக வாழ்வுதான்.


பிரேம்ஜி
ஜன 08, 2025 10:13

ஓய்வுக்கு பின் இவர் எங்கே போனால் யாருக்கு என்ன? இதெல்லாம் ஒரு செய்தியா?


Barakat Ali
ஜன 08, 2025 09:55

இமயமலை போயி தன்னை மறக்குற எங்க ஊரில் இருக்கு .....


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 08, 2025 09:35

சுய பரிசோதனை, இறை நம்பிக்கை, முதுமையை பயனுள்ள வகையில் கழித்தல், அடுத்த தலைமுறைக்கு உதவும் மனப்பான்மை, சக மனிதர்களுடன் பண்புடன் பழகும் தன்மை இவையெல்லாம் சான்றோர்க்கு அழகு.


Ravi Balan
ஜன 08, 2025 09:13

என்னதான் பதவி வயது என்று இருந்தாலும் அவரின் ஆழ் மனதில் சிறு சிறு ஆசைகள் இருக்கும் அதனை நிறைவேற்ற அவரின் தனிமை அவர்க்கு தேவை படுகிறது இதனை கட்சி அரசியல் என்று மடை மாற்ற வேண்டாம்


Thirumal s S
ஜன 08, 2025 08:20

பீஜேபியுடன் சேர்ந்து செய்த பாவத்திற்காகவா


இறைவி
ஜன 08, 2025 08:55

பிஜெபியுடன் சேர்ந்தும் உங்களைப்போல ஆயுட்கால அடிமைகளை மனம் மாற்ற முடியவில்லையே என்ற வருத்தத்தில் இமயமலைக்கு தவம் செய்ய போகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். திராவிட குஞ்சுகள் வேறு யாரிடமும் ஆலோசனை கேட்க வேண்டாம். உங்கள் ஊரிலிருந்து ராணுவம், மத்திய அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் வட இந்தியாவில் வேலை செய்பவர்களிடம் உங்கள் உடன்பிறப்புகள், நண்பர்களிடம் திராவிட சித்தாந்தைப் பற்றி, திராவிட அரசியல் பற்றி, ஹிந்தி கற்றுக்கொள்வது பற்றி, புதிய கல்வி கொள்கை பற்றி, நீட் தேர்வு பற்றி அவர்கள் அபிப்பிராயம் என்ன என்று கேளுங்கள். பத்துக்கு ஒன்பது பேர் திராவிட அரசியலுக்கு எதிராகத்தான் பேசுவார்கள். காரணம் அவர்கள் திராவிட கிணற்றிலிருந்து வெளியேறி வெளி உலகம் என்ன, எப்படி இருக்கிறது என்று பார்த்து அனுபவித்தவர்கள். வாழ்க்கையில் உயர விருப்பம் இருந்தால் திறந்த மனதோடு பேசிப் பாருங்கள்.


Oru Indiyan
ஜன 08, 2025 09:02

இவர் என்ன பாவம் செய்தார் .. உங்களை மாதிரி 200 ரூபாய்க்கு கூவற அறிவிலி இல்லை இவர்.


சிவம்
ஜன 08, 2025 09:48

பிஜேபி அரசாங்கத்தில் பணிபுரிவோர் ஓய்வு பெற்ற பிறகு இமயமலை செல்ல விரும்புவார்கள். காங்கிரஸ் அரசில் இருந்திருந்தால், கொள்ளையடித்த பணத்தை வைத்து நாள் முழுவதும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்.


N.Purushothaman
ஜன 08, 2025 10:30

நல்ல பதில் இறைவி ..


vkiranth
ஜன 08, 2025 12:57

ஓ நீ விடியல் ஆளா


புதிய வீடியோ