உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இளைஞர்களின் நம்பிக்கையை உடைக்கும் அரசு: ராகுல் குற்றச்சாட்டு

இளைஞர்களின் நம்பிக்கையை உடைக்கும் அரசு: ராகுல் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' இளைஞர்களின் நம்பிக்கையை உடைத்து, அவர்களை நம்பிக்கை அற்றவர்களா மாற்றுவது இந்த அரசின் அடையாளமாக மாறிவிட்டது,'' , என காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார்.இது தொடர்பாக ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்திய இளைஞர்களின் மிகப்பெரிய பிரச்னை வேலைவாய்ப்பின்மை. இது நேரடியாக ஓட்டுத் திருட்டுடன் தொடர்பு உடையது. மக்களின் நம்பிக்கையுடன் ஆட்சிக்கு வரும் அரசு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வாய்ப்புகளை வழங்குவதை முதல்வேலையாக செய்ய வேண்டும். பாஜ நேர்மையாக தேர்தலில் வெற்றி பெறவில்லை. ஓட்டுகளை திருடியும், அமைப்புகளை கைப்பற்றியும் அதிகாரத்தில் அமர்ந்துள்ளது. இதனால் தான் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை உச்சத்தை தொட்டுள்ளது.வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன. ஆட்சேர்ப்பு செயல்முறைகள் சரிந்துள்ளன. இளைஞர்களின் எதிர்காலம் இருளில் தள்ளப்படுகிறது. ஒவ்வொரு வினாத்தாள் கசிவு மற்றும் ஒவ்வொரு ஆட்சேர்ப்பும் ஊழல் கதைகளுடன் பிணைக்கப்பட்டுள்ளன. நாட்டின் இளைஞர்கள் கடினமாக உழைத்து கனவுகளுடன் எதிர்காலத்துக்காக போராடி வருகின்றனர். ஆனால், மோடி தனது விளம்பர மேனேஜருடன் பிசியாக உள்ளார். இளைஞர்களின் நம்பிக்கையை உடைத்து அவர்களை நம்பிக்கை அற்றவர்களாக மாற்றுவது இந்த அரசின் அடையாளமாக மாறிவிட்டது.தற்போது சூழ்நிலை மாறிவிட்டது. இளைஞர்கள் உண்மையை உணர துவங்கிவிட்டனர். தங்களது உண்மையான போராட்டம் வேலைவாய்ப்புக்காக அல்ல. ஓட்டுத்திருட்டுக்கு எதிரானது என தெரிந்துவைத்துள்ளனர். தேர்தல்கள் திருடப்படும் வரை, வேலைவாய்ப்பின்மையும் ஊழலும் அதிகரித்து கொண்டே இருக்கும். இப்போது இளைஞர்கள் வேலைகள் சூறையாடப்படுவதையோ அல்லது ஓட்டுகள் திருடப்படுவதையோ பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். வேலையின்மை மற்றும் ஓட்டுத்திருட்டில் இருந்து இந்தியாவை விடுவிப்பது தான் மிகப்பெரிய தேசபக்தி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

R SRINIVASAN
செப் 24, 2025 22:17

ராகுல் காந்திக்கு நட்டு நடப்பை பத்ரியோ, இந்தியாவின் பொருளாதாரத்தைப்பத்திரியோ ஒன்றும் தெரியவில்லை .அதனால் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் சென்று ஆலோசனைகள் செய்து வருகிறார். பேசாமல் ராகுல் பிரகாஷ் ராஜிடம் ஆலோசனைகள் கேட்கலாம்.


பேசும் தமிழன்
செப் 24, 2025 08:03

பாகிஸ்தான் மற்றும் சீனாவின் நம்பிக்கை நட்சத்திரம்... இத்தாலி பப்பு வை நாட்டு மக்கள் அனைவரும் பாராட்ட வேண்டும்.... கான் கிராஸ் கட்சியை அழித்த பெருமை இத்தாலி போலி காந்தி கும்பலையே சேரும்.... கான் கிராஸ் கட்சி அழிவது நாட்டுக்கு நல்லது.


பேசும் தமிழன்
செப் 24, 2025 07:59

பப்பு..... நாட்டு மக்களை நம்பிக்கையற்றவர்களாக மாற்றுவது நீங்களும் உங்கள் போலி காந்தி கும்பலும் தான்.. எப்போதும் நாட்டை பற்றிய எதிர்மறை எண்ணங்களை மக்களிடம் விதைக்கும் செயலை மட்டுமெ செய்கிறீர்கள்.


நிக்கோல்தாம்சன்
செப் 24, 2025 07:42

எங்களின் வாழ்வினை கெடுக்காமல் உங்களுக்கு தூக்கமே வராது அல்லவா காங்கிரஸ் தலைவரே


ராமகிருஷ்ணன்
செப் 24, 2025 04:33

ராவுலுக்கு உடல் முழுவதும் அல்ட்ரா ஸ்கேன் செய்து பாருங்கள் முக்கியமாக தலை பகுதியில். பல உறுப்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும்.பிறவியிலேயே சில உறுப்புகள் இல்லாமல் இருக்கும், காங்கிரஸ் நல்ல சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்.


Rajasekar Jayaraman
செப் 24, 2025 03:27

உள்ளே வைத்து குத்தினால் என்ன மத்திய அரசு செய்யலாமே.


Thravisham
செப் 23, 2025 22:05

சீனாவின் நம்பிக்கை நாயகன் மிஸ்டர் Pappu


vbs manian
செப் 23, 2025 20:58

இவர் எவ்வளவு தூரம் இளைஞர்களை ஊக்குவிக்கிறார். தன குடும்பம் தாண்டி யோசிக்கவில்லை. என்பது வயது தாத்தாவை தலைவர் ஆக்கியிருக்கிறார். இளைஞர்கள் வந்தால் தனக்கு ஆபத்து என்று நினைக்கிறார். தங்களுக்கு எதிர்காலம் மோடி ஆட்சியில் நிச்சயம் என்று இளைய சமுதாயம் நம்புகிறது. .


Ramesh Sargam
செப் 23, 2025 19:02

ராகுல், இந்தியாவின் டொனால்ட் ட்ரம்ப் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் ராகுல். அவ்வளவுதான்


என்றும் இந்தியன்
செப் 23, 2025 18:53

ராகுல் என்னும் இளைஞர்களின் நம்பிக்கையை உடைக்கும் அரசு: ராகுல் குற்றச்சாட்டு என்று படியுங்கள் அர்த்தம் சரியாக இருக்கும்