உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நக்சல் அமைப்பிற்கு மிகப்பெரிய பலத்த அடி; ஓராண்டில் மாவோயிஸ்டுகள் 357 பேர் சுட்டுக்கொலை!

நக்சல் அமைப்பிற்கு மிகப்பெரிய பலத்த அடி; ஓராண்டில் மாவோயிஸ்டுகள் 357 பேர் சுட்டுக்கொலை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கடந்த ஓராண்டில் மாவோயிஸ்டுகள் 357 பேர் கொல்லப்பட்டதாக பஸ்தார் ஐ.ஜி., சுந்தர்ராஜ் தெரிவித்து உள்ளார். மாவோயிஸ்டுகள் 357 பேர் கொல்லப்பட்டதை, நக்சல் அமைப்புகள் ஒப்புக் கொண்டு உள்ளது.தண்டகாரண்யா பகுதியில் கடந்த ஓராண்டில் அதிகபட்ச இழப்புகளைச் சந்தித்ததாக மாவோயிஸ்ட் மத்திய குழு ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த சில மாதங்களாக, மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என பஸ்தார் ஐ.ஜி., சுந்தர்ராஜ் தெரிவித்தார். மாவோயிஸ்ட் அமைப்பின் பொதுச் செயலாளர் பசவ ராஜு உட்பட பல மாவோயிஸ்டுகளின் உடல்கள் பல்வேறு என்கவுண்டர்களுக்குப் பிறகு மீட்கப்பட்டன.இது குறித்து, பஸ்தார் ஐ.ஜி., சுந்தர்ராஜ் கூறியதாவது: தற்போதைய சூழ்நிலையைப் பார்க்கும்போது, பஸ்தரில் இருந்து நக்சலிசம் விரைவில் ஒழிக்கப்படும்.பஸ்தாரில் வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கத்துடன், அரசாங்கத்தின் நோக்கத்திற்கும் அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கும் ஏற்ப நாங்கள் செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
ஜூலை 17, 2025 12:27

மாவோயிஸ்டுகள் 357 பேர் சுட்டுக்கொலை. ஆகா இந்த செய்தியை படிப்பதற்கே இனிப்பாக இருக்கிறது. மிச்சமிருக்கும் நக்ஸல்களையும் போட்டுத்தள்ளுங்கள். அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் ஆசாமிகளையும் பிடித்து சிறையில் அடைத்து சரியாக தண்டிக்கவும்.


Thravisham
ஜூலை 17, 2025 11:07

//நக்சல் அமைப்பிற்கு மிகப்பெரிய பலத்த அடி// மகிழ்ச்சியான செய்தி அதேபோல திருட்டு த்ரவிஷன்களுக்கும் பலத்த அடி எப்போ கிடைக்கும்?


SUBASH CHANDRA BOSE
ஜூலை 17, 2025 10:51

சுட்டுக் கொலை என்பது தவறு, களையெடுப்பு என்பதே சரி. ஜனநாயகத்தை வளர விடாமல் தடுப்பது தேச துரோகம்.


Raa
ஜூலை 17, 2025 10:24

தலைவன் சரியாக இருந்தால் மற்றவை சரியாக தானாக நடக்குமுங்க. need எ decisioning power... சும்மா வழவழா கொழகொழானு இருக்கும் தலைமைகளில் இதுமாதிரி ஓர் ஆண்டில் முன்னேற்றம் காட்ட முடியாது.


Thravisham
ஜூலை 17, 2025 11:04

டெஸிஸிவ் பவர் பாஜகவின் தலைமையில் உள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை