வாசகர்கள் கருத்துகள் ( 1 )
peyar sonnaal pothum moorkans thara tharam elithil vilangum
புதுடில்லி: புதுடில்லி அருகே குட்காவை மென்று துப்பியதால் 35 வயது நபர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதுபற்றிய விவரம் வருமாறு; டில்லி அருகே காஜூரி காஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஆமீர். இவர் முதுகில் துப்பாக்கிக் குண்டு காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கும், அண்டை வீட்டில் வசிக்கும் சிலருக்கும் இடையே குட்கா மென்று உமிழ்வது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்றும் இதேபோன்று சண்டை ஏற்பட, அதில் உக்கிரமான ஒரு தரப்பு, ஆமீரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது. இதில் முதுகில் குண்டு காயம் அடைந்த ஆமீர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தகவலறிந்த போலீசார் வழக்கு பதிந்து, துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமானவர்கள் அமன்(20), அவரது தந்தை இர்பான்(40), ரெஹான்(18) என அடையாளம் கண்டுள்ளனர். இதில் அமான் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
peyar sonnaal pothum moorkans thara tharam elithil vilangum