உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏர் இந்தியாவின் 37% விமானங்கள் 10 ஆண்டுகளை கடந்தவை; வெளியானது புள்ளி விவரம்

ஏர் இந்தியாவின் 37% விமானங்கள் 10 ஆண்டுகளை கடந்தவை; வெளியானது புள்ளி விவரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் 37 சதவீத விமானங்கள் 10 ஆண்டுகளை கடந்தவை என்பது பார்லிமெண்டில் தாக்கல் செய்யப்பட்ட புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது.ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 -8 டிரீம் லைனர் விமானம் 30 வினாடிகளில் விழுந்து நொறுங்கியது. விபத்தில் பயணிகள், சிப்பந்திகள், விமானிகள் என 241 பேர் பலியாகினர். விமானத்தில் பயணித்த ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக பலி எண்ணிக்கை 265 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் பெரும் சோகம் மற்றும் அதிர்ச்சியை இந்த சம்பவம் ஒருசேர நிகழ்த்தி உள்ளது. இந்நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 37 சதவீத விமானங்களின் வயது 10 ஆண்டுகளை கடந்தவை என்பது பார்லிமெண்டில் தாக்கல் செய்யப்பட்ட புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு; ஆமதாபாத் விமான விபத்துக்கு முன்னர் ஏர் இந்தியா மொத்தம் 188 விமானங்களை இயக்கி வருகிறது. இந்த விமானங்களில் 43 விமானங்கள், 15 ஆண்டுகளை கடந்தவை. 27 விமானங்கள் 10 முதல் 15 ஆண்டுகளாக இயங்கி வருபவை.59 ஏர் இந்தியா விமானங்கள் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகளாக வானில் பறப்பவை. 69 விமானங்கள் 5 ஆண்டுகளுக்குக்கும் குறைவாகவே இயக்கப்பட்டு வருகின்றன. இதில் ஆமதாபாதில் விபத்தை சந்தித்த ஏர் இந்தியா விமானத்தின் வயது 11 ஆண்டுகள். இந்த புள்ளி விவரங்கள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் பார்லிமெண்டில் அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்டவை ஆகும். அதில் இடம்பெற்றுள்ள கூடுதல் விவரங்கள் வருமாறு; இந்தியாவில் ஒரு விமானம் பறப்பதற்கான ஆயுட்காலம் குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் எந்த வழி காட்டுதல்களையும் வகுக்கவில்லை. விமானங்களின் உற்பத்தியாளரால் நிர்ணயிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட, அட்டவணையின்படி பராமரிப்புடன் இருந்தால் விமானம் பறக்க தகுதியானதாக கருதப்படும்.இந்தியாவை பொறுத்தவரை பதிவு செய்யப்பட்ட விமானம், அது எந்த வகையானது என்ற சான்றிதழ் செல்லுபடியாகும் வரை அல்லது தொடர்ந்து இயக்கலாம் என்று அதன் உற்பத்தியாளர் அல்லது அதை பராமரிப்பவர் சான்றளிக்கும் வரை இயக்கப்படலாம். விமானத்தின் பழுதான உதிரி பாகங்கள் கிடைக்காதது, கோளாறை சரி செய்யும் ஆகும் செலவு மிக அதிகமானது போன்ற காரணங்களினால் விமான இயக்கத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அருண், சென்னை
ஜூன் 14, 2025 09:05

டாட்டாவை வசைபாடுவது தவறு... 10 வருடங்காலா அது மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருந்தது, டாட்டா ஏர் இந்தியாவை வாங்கி 1 வருடம் கூட ஆகவில்லை, 10 வருடம் என்றால் காங்கிரஸ் ஆட்சிதான் நடந்தது..அப்போ வாங்கிய விமானம்தானே? டாட்டா இப்போது புது விமானங்களை வாங்க போகிறது ஆர்டர் கொடுத்துவிட்டது... அழிவின் விளிம்பில் இருந்தது ஏர் இந்தியா...அதனால், டாட்டா வாங்கியது..வசை பாடுபவர்களுக்கு என்ன... எவ்வளவு நல்லது செய்தாலும் கெட்டபழி வருவது ஆச்சிர்யம் இல்லை...நன்றி கெட்ட மனிதர்...


mynadu
ஜூன் 13, 2025 21:58

ஏர் இந்தியா பிலைட் டொரோண்டோ கனடா டு டெல்லி பிலைட் ரொம்ப மோசமா இருக்கும், பாதி சீட் உடைஞ்சு , சீட் பெல்ட் அறுந்து , வீடியோ சிஸ்டம் வேலையே செய்யாது. ரொம்ப கொடுமையான விஷயம் 38000 அடிக்கு மேல பறக்கும் போது செமையா பயமா இருக்கும். இதுவே வேலை செய்யாம இருக்குதுனா என்ஜின் மற்ற முக்கியமனா விஷயம் எப்பெடி அவங்க கவனிச்சு இருப்பாங்கன்னு நம்புறது. இந்திய அரசு இவங்கள கடுமையா தண்டிக்கனும் அதுபோல பழைய பிலைட் செக் பண்ணி பறக்க அனுமதி சான்றிதழ் வழங்கினால் மட்டுமே பார்க்கனும் கடுமையா எச்சரிக்கை கொடுக்கனும்


Murthy
ஜூன் 13, 2025 21:28

அனைத்து விமானங்களும் ஏதோ ஓடிக்கிட்டு இருக்கின்றன ......


ஆரூர் ரங்
ஜூன் 13, 2025 20:50

பத்தாண்டுகளுக்கு முன்பு அரசின் ஏர் இந்தியா விமானங்களின் சராசரி வயது இருபத்தைந்து.


Sudha
ஜூன் 13, 2025 20:17

மந்திகள் எல்லாம் ஓசி யில் பயணித்த போது நடந்திருக்க வேண்டும். இந்த கோணத்தில் கூட ஏர் இந்தியா விற்பனை யை ஆராய வேண்டும். அடிமாட்டு விற்பனை


மீனவ நண்பன்
ஜூன் 13, 2025 20:14

லுப்தான்சா விமானத்தில் அமர்ந்தால் அரிசி மில் மாதிரி சத்தம் ..பழங்கால விமானங்கள் .கத்தார் மற்றும் எமிரேட்ஸ் புதிய விமானங்கள்


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூன் 13, 2025 19:57

அதனால் என்ன இப்போ? வருடாவருடம் புதுசா வாங்க விமானம் தீபாவளி துணி இல்லைங்கோ.


Svs Yaadum oore
ஜூன் 13, 2025 19:22

ஏர் இந்தியா 37 சதவீத விமானங்கள் 10 ஆண்டுகளை கடந்தவையாம் ....இதே விமானங்கள்தான் உலகில் பல நாடுகளில் உபயோகத்தில் உள்ளது ....அது பிரச்சனை இல்லை ..இங்குள்ள மற்ற தனியார் விமான கம்பெனிகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டவை என்பதால் அவர்கள் விமானங்கள் சமீபத்தில் வாங்கியவை ....ஏர் இந்தியா விமானங்கள் ஆண்டுகள் கடந்திருந்தாலும் அந்த விமானங்கள் தர கட்டுப்பாடு பாதுகாப்பு நன்கு உறுதிப்படுத்த வேண்டும் ..இல்லையென்றால் பழைய விமானங்கள் இயங்க அனுமதி அளிக்க கூடாது .....மேலும் ஏர் இந்தியா 500 புதிய விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை