உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெருவழிப்பாதையில் 4 நாள் அனுமதி ரத்து; ஜோதி தரிசனத்திற்கு அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்

பெருவழிப்பாதையில் 4 நாள் அனுமதி ரத்து; ஜோதி தரிசனத்திற்கு அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சபரிமலை : ''நாளை முதல் ஜன. 14 வரை பெரு வழிப்பாதையில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. ஜன., 12 முதல் 15 மதியம் வரை பம்பை ஹில்டாப்பில் பார்க்கிங் அனுமதி இல்லை,'' என சபரிமலை திருவிழா கட்டுப்பாடு அதிகாரியும், சப் கலெக்டருமான அருண் நாயர் கூறினார்.சன்னிதானத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஜன., 14 மகரஜோதி நாளில் நெரிசல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதன் ஒரு பகுதியாக 'ஸ்பாட் புக்கிங்' எண்ணிக்கை, ஜன., 12, 13ல் ஐந்தாயிரமாகவும், 14ல் ஆயிரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆன்லைன் முன்பதிவு ஜன., 12ல் 60 ஆயிரம், 13ல் 50 ஆயிரம், 14-ல் 40 ஆயிரம் என குறைக்கப்பட்டுள்ளது.ஜன., 12- காலை 8:00 மணி முதல் ஜன., 15 மதியம் 2:00 மணி வரை பம்பை ஹில்டாப்பில் சிறிய வாகனங்கள் பார்க்கிங் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. பம்பை சாலக்கயத்தில் சிறிய வாகனங்கள் நிரம்பும் பட்சத்தில் அனைத்து வாகனங்களும் நிலக்கல்லுக்கு திருப்பி அனுப்பப்படும்.பம்பையில் நெரிசலை தவிர்க்க இங்கு செயல்பட்டு வந்த 'ஸ்பாட் புக்கிங்' கவுன்டர்கள் நிலக்கல்லுக்கு மாற்றப்பட்டுள்ளன. இனி அனைத்து வாகனங்களும் நிலக்கல் மைதானத்திற்கு சென்று திரும்பும். 'ஸ்பாட் புக்கிங்' தேவைப்படுவோர் நிலக்கல்லில் இறங்கி பதிவு செய்து வர வேண்டும்.நாளை முதல் ஜன., 14 வரை பெருவழிப்பாதையில் பக்தர்கள் வருவது தடை செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்தவர்கள் பம்பை வந்து சன்னிதானத்துக்கு செல்ல வேண்டும். அம்பலப்புழா மற்றும் ஆலங்காடு பக்தர்கள் மட்டும் ஜன., 11ல் பெருவழிப்பாதையில் வருவதற்கு அனுமதிக்கப்படுவர்.ஜோதி தரிசனத்துக்காக காடுகளில் குடில் கட்டி தங்கி உள்ள பக்தர்கள் சமையல் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதற்காக பம்பையில் இருந்து காஸ் சிலிண்டர்களுடன் பக்தர்கள் வந்தால் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் தரிசனம் முடிந்து திரும்பிச் செல்லும் போது வழங்கப்படும். கடந்த ஆண்டு திருவாபரணம் வந்தபோது வலியான வட்டத்தில் பக்தர்களின் நெரிசல் ஏற்பட்டது. இதனால் இந்தாண்டு இங்கு கூடுதல் போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் பணியமர்த்தப்படுவர்.பெருவழிப்பாதையில் வரும் ஏராளமான பக்தர்கள் பெரியான வட்டம் வந்ததும் உட்காடு வழியாக நீலிமலை வந்து சன்னிதானம் வருகின்றனர். காடுகளில் அனுமதி இன்றி செல்வது சட்டப்படி குற்றமாகும். இது போன்ற செயல்களை பக்தர்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

RR Donn Lee
ஜன 10, 2025 17:14

Lord Almighty Ayyappa Blessings, for every respective Devotees. Have a wonderful Mahara Jothi Dharshan


Kasimani Baskaran
ஜன 10, 2025 06:46

பெருங்கூட்டம் வந்தால் ஏதாவது ஒரு வழியில் கூட்டத்தை கட்டுப்படுத்தித்தானே ஆகவேண்டும். அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பிரார்த்தனைகள்.