உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இண்டிகோ விமான சேவை முடங்கிய விவகாரம்; 4 அதிகாரிகளை பணிநீக்கம் செய்தது டி.ஜி.சி.ஏ.,

இண்டிகோ விமான சேவை முடங்கிய விவகாரம்; 4 அதிகாரிகளை பணிநீக்கம் செய்தது டி.ஜி.சி.ஏ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இண்டிகோ விமான சேவைகளை மேற்பார்வையிடும் விமான செயல்பாட்டு ஆய்வாளர்கள் (FOI) 4 பேரை பணிநீக்கம் செய்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசின் புதிய விதிமுறைகளை புறந்தள்ளிய இண்டிகோ விமான நிறுவனம் கடும் நெருக்கடியில் இருக்கிறது. போதிய விமானிகள் இல்லாத சூழலில், 10 நாட்களுக்கும் மேலாக விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்து வருகிறது. விமான நிறுவனத்தின் செயல்பாட்டு பிரச்னையால், இண்டிகோவின் 10 சதவீத விமான சேவை குறைக்கப்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=e9mkimvg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் பார்லிமென்ட் வரை எதிரொலித்தது. இந்த நிலையில், இண்டிகோ விமான சேவைகளை மேற்பார்வையிடும் விமான செயல்பாட்டு ஆய்வாளர்கள் 4 பேரை பணிநீக்கம் செய்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இண்டிகோ விமான சேவைகள் முடங்கிய விவகாரத்தில் தொடர்புடைய விமான செயல்பாட்டு ஆய்வாளர்கள் ரிஷி ராஜ் சாட்டர்ஜி, சீமா ஜாம்னானி, அனில் குமார் போகரியல், பிரியம் கவுசிக், ஆகியோரின் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக டிஜிசிஏ அறிக்கை வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Venugopal S
டிச 13, 2025 06:31

இண்டிகோ விமான நிறுவனத்தை பலவீனப்படுத்தி அவர்களே அதை அதானிக்கு அடிமாட்டு விலையில் விற்பனை செய்ய முடிவு செய்து விட்டது போல் உள்ளது!


Vasan
டிச 12, 2025 16:19

Was cancellation of Indigo flights in order to promote Indian Airlines, which lost considerable business after the Ahmedabad plane crash that happened 6 months ago?


Ranga Srinivas
டிச 12, 2025 14:51

Aviation Minister Should Resign and the DGCA Chief Should Resign. Indigo Chariman and CEO should be ge sheeted and removed form the post for what the injustice and cruel attitude towards the many innocent passengers.


RANGANATHAN
டிச 12, 2025 13:52

Termination is from DGCA not in indigo


Ramesh Sargam
டிச 12, 2025 13:31

ஏற்கனவே இண்டிகோ விமான சேவை முடக்கத்துக்கு காரணம் விமான ஓட்டுனர்கள், அதவாது பைலட் பற்றாக்குறை மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை காரணம் என்று கூறுகிறார்கள். இதில் மேலும் நான்கு அதிகாரிகளை பணிநீக்கம் செய்தால், சேவை மேலும் முடங்காதோ?


அப்பாவி
டிச 12, 2025 13:20

ஒப்பந்தமா?அப்படீன்னா consultant களை வெச்சிக்கிட்டு ஜல்லியடிச்சீங்க. சாயம் வெளுத்த பின் பணி நீக்கம். கன்சல்ட்டண்டுகள் கோடிக்கணக்கில் துட்டு அடிச்சிருப்பாங்க.


புதிய வீடியோ