உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹிமாச்சலில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி; 2 பேர் மாயம்

ஹிமாச்சலில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி; 2 பேர் மாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சாம்பா: ஹிமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மேலும், மாயமான 2 பேரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 20ம் தேதி முதல் ஹிமாச்சல பிரதேசத்தில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இங்குள்ள மலை மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரையில் 158 பேர் உயிரிழந்துள்ளனர். 38 பேர் மாயமாகியுள்ளனர். இதுவரையில் 90க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 42 இடங்களில் மேகவெடிப்பும், 85 இடங்களில் பெரிய அளவில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால், சமார் ரூ.2,600 கோடி சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uax38p6n&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதிகபட்சமாக சாம்பா மாவட்டத்தில் ஒரே இரவில் 51 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஹிமாச்சலில் குறிப்பிட்ட பகுதிகளில் ஆக.,31 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், ஹிமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் மாயமடைந்தனர். பசோந்தான் கிராமத்தில், ஒரு மலை சரிவைக் காண வெளியே சென்ற அண்ணன், தங்கை நிலச்சரிவில் சிக்கி, மண்ணுக்குள் புதையுண்டனர். அதேபோல, மெஹ்லாவில், இரு தனித்தனி நிலச்சரிவுகளில் சிக்கி மேலும் 2 பெண்கள் பலியாகினர். அதேபோல, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இன்னும் 2 பேரை காணவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை