உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  மூதாட்டியிடம் கொள்ளையடித்த 4 பேர் சிக்கினர்

 மூதாட்டியிடம் கொள்ளையடித்த 4 பேர் சிக்கினர்

புதுடில்லி:மூதாட்டியை தாக்கி நகைகளை கொள்ளையடித்த இரு இளம்பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். டில்லி பிந்தாபூரில் வசிக்கும் 86 வயது மூதாட்டி வீட்டில் ஒரு அறை காலியாக இருந்தது. அதை வாடகைக்கு விடுவதாக விளம்பரம் செய்திருந்தார். கடந்த, 14ம் தேதி இரண்டு இளம் பெண்கள் மற்றும் இரண்டு வாலிபர்கள், மூதாட்டி வீட்டுக்கு வந்தனர். அறை வாடகை குறித்து விசாரித்தனர். பேசிக்கொண்டு இருக்கும் போதே, மூதாட்டியை கீழே தள்ளி அவர் அணிந்திருந்த தங்க வளையல்கள், கம்மல், மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். நந்த ராம் பூங்காவைச் சேர்ந்த ரத்தன் மெஹ்தோ,19, அவரது சகோதரிகள் அஞ்சலி, 24, ரஞ்சு,20 மற்றும் நண்பர் உத்தம் நகரைச் சேர்ந்த ராஜூகுமார்,27 ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வளையல், கம்மல் மற்றும் மோதிரம் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ