மேலும் செய்திகள்
கிரைம் செய்திகள்
12-Sep-2024
மின்கம்பத்தில் மோதிய வேன் உயிர் தப்பிய மாணவர்கள்
24-Sep-2024
அத்திப்பள்ளி: பெங்களூரில் ஓடும் காரில் புகை கிளம்பி தீப்பிடித்தது. நான்கு பேர் உயிர் தப்பினர்.பெங்களூரு அத்திப்பள்ளி அருகே யதவனஹள்ளி பகுதியில், நேற்று மதியம் 1:00 மணிக்கு ஹுண்டாய் 'க்ரெட்டா' கார் சென்றது. நான்கு பேர், காருக்குள் இருந்தனர். காரில் முன்பகுதியில் இருந்து, புகை கிளம்பியதை கவனித்து, காரை ஓட்டியவர் நிறுத்தினார். நான்கு பேரும் இறங்கி சென்று பார்த்தனர். திடீரென கார் தீப்பிடித்தது.அதிர்ச்சி அடைந்த நான்கு பேரும், காரில் இருந்து விலகிச் சென்றனர். தீயணைப்பு படையினர் அங்கு வந்து, தீயை அணைத்தனர். ஆனாலும் முன்பகுதி எரிந்து சேதம் அடைந்தது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. வயர்கள் உரசியதால் தீ பிடித்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. புகை கிளம்பியதும் நான்கு பேரும் காரில் இருந்து இறங்கியதால், உயிர் தப்பினர்.
12-Sep-2024
24-Sep-2024