உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.2,532 கோடி வருமானம் ஈட்டிய மாநில கட்சிகள்: திமுக - ரூ.180 கோடி, அதிமுக - ரூ.46 கோடி வருவாய்

ரூ.2,532 கோடி வருமானம் ஈட்டிய மாநில கட்சிகள்: திமுக - ரூ.180 கோடி, அதிமுக - ரூ.46 கோடி வருவாய்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள 40 மாநில கட்சிகள் 2023 -24ம் நிதியாண்டில் ரூ.2,532.09 கோடி வருமானம் ஈட்டி உள்ளன. இவற்றில் 70 சதவீதம் தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்துள்ளதாக, ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் தெரிவித்துள்ளது.கடந்த 2023 - 24ம் நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள மாநில கட்சிகளின் வருமானம் குறித்து ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி,அதில், இந்த நிதியாண்டில் 40 மாநில கட்சிகள் சேர்ந்து ரூ.2,532.096 கோடி வருமானம் ஈட்டி உள்ளன. அதில் 70 சதவீதம்( ரூ.1,796.024) கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்துள்ளன.

அதிக வருமானம் ஈட்டிய கட்சிகள்

பிஆர்எஸ்( பாரதிய ராஷ்ட்ரிய சமிதி) - ரூ.685.51 கோடியும்( முந்தைய ஆண்டை விட ரூ.52 கோடி குறைவு)திரிணமுல் காங்கிரஸ்- ரூ.646.39 கோடியும்( முந்தைய ஆண்டை விட ரூ.312 கோடி அதிகம்)பிஜூ ஜனதா தளம் - ரூ.297.81 கோடியும்( முந்தைய ஆண்டை விட ரூ.116 கோடி அதிகம்)தெலுங்கு தேசம் - ரூ.285.07 கோடியும்( முந்தைய ஆண்டை விட ரூ.221 கோடி அதிகம்)ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் - ரூ.191.04 (முந்தைய ஆண்டை விட ரூ.116 கோடி அதிகம்)திமுக - ரூ.180.94 கோடி( முந்தைய ஆண்டை விட ரூ.33 கோடி குறைவு)அதிமுக - ரூ.46.98 கோடி வருமானம் ஈட்டி உள்ளன. ( முந்தைய ஆண்டை விட ரூ.26 கோடி அதிகம்)இவ்வாறு வருமானம் பெற்ற 27 மாநில கட்சிகள், தங்களின் வருமானத்தை செலவு செய்யவில்லை. 12 கட்சிகள் வருமானத்தை விட செலவு அதிகரித்துள்ளது.தங்களுக்கு கிடைத்த வருமானத்தில்பிஆர்எஸ் - ரூ.430.60 கோடிதிரிணமுல் - ரூ.414.92பிஜூ ஜனதா தளம் - ரூ.253.79 கோடியை செலவு செய்யாமல் வைத்துள்ளன.இதற்கு மாறாக ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம்,ஓய்எஸ்ஆர் காங் ஆகிய கட்சிகள் வருமானத்தை விட அதிக செலவு செய்துள்ளன. பிஆர்எஸ், திரிணமுல் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட 10 கட்சிகள் தேர்தல் பத்திரம் மூலம் ரூ.1,796.02 கோடி ( 70.93 சதவீதம்) வருமானம் ஈட்டியுள்ளன.மாநில கட்சிகள், கடந்த 2022 -23 நிதியாண்டில் இந்த கட்சிகள் சேர்ந்து ரூ.1,736.85 கோடி மொத்த வருவாய் பெற்றன. அடுத்தாண்டு வருமானம் 45.77 சதவீதம் அதிகரித்துள்ளது மேற்கண்ட விவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

KRISHNAN R
செப் 11, 2025 20:01

ஆன் அபிசியல் எவ்ளோ


venugopal s
செப் 11, 2025 12:15

சிங்க வேட்டையில் நரிகளுக்கு கிடைத்த பங்கே இவ்வளவு என்றால் சிங்கம் எவ்வளவு சாப்பிட்டு இருக்குமோ?


Kasimani Baskaran
செப் 11, 2025 04:15

பாத்து ரூபாய் பாலாஜியை 350 கோடியில் வீடு காட்டும் பொழுது 180 கோடி நண்கொடை என்பது தீம்க்காவை கேலி செய்வது போல இருக்கிறது. 1800 கோடி என்றால் நம்பலாம்.


Tamilan
செப் 10, 2025 23:25

மோடி ஆட்சியில் பணம் தெருவில் வீசியடிக்கப்படுகிறது. இதெல்லாம் எங்கிருந்து வந்தது என்று யாரும் கண்டுகொள்ளவில்லை


ManiMurugan Murugan
செப் 10, 2025 22:30

இந்த வருமானம் வருவது எப்படி


Varadarajan Nagarajan
செப் 10, 2025 22:17

தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடைகளில் பி ஜே பி அதிகம் பெற்றிருந்ததை பார்த்தவுடன் பொங்கிய உ பிக்கள் இந்த மாநில கட்சிகளின் விபரங்களில் திமுக பெற்ற விபரத்தை பார்த்தவுடன் ஏன் ஓடி ஒளிந்துகொண்டுள்ளார்கள்?


Srinivasan Narasimhan
செப் 10, 2025 21:48

அரசியல் ரகட்சிகளுக்கு சலுகைகள் எதற்கு எண்ண கிழித்தார்கள்


Alphonse Mariaa
செப் 10, 2025 21:08

என்ன வணிகம் செய்தார்கள் லாபம் ஈட்ட


Gokul Krishnan
செப் 10, 2025 19:56

இந்த வருமானத்துக்கு மட்டும் எல்லாம் விலக்கும் கொடுப்பாங்க அதோடு இனாமாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இருந்து முழு விலக்கு எல்லாம்...


திகழ்ஓவியன்
செப் 10, 2025 19:04

சரி,முதல்ல பிஜேபி–க்கு எவ்வளவு சென்றது?அதை சொல்லுங்கள்...


Krishnamurthy Venkatesan
செப் 10, 2025 19:37

இங்கு மாநில கட்சிகள் பற்றிய விபரம் தந்துள்ளார்கள். இதற்கு முன்னரே அகில இந்திய கட்சிகளின் வருமானத்தை தெரியப்படுத்திவிட்டார்கள். தூங்குகிறவனை எழுப்பலாம், நடிப்பவனை என்ன செய்ய முடியும்.


Artist
செப் 10, 2025 19:56

தெரிஞ்சு என்ன செய்யப்போறீங்க ? இங்கே 200 தானே ?


முக்கிய வீடியோ